ராமேஸ்வரத்தின் புதிய புனித தலமாக மாறிய அப்துல் கலாம் நினைவிடம்..
தேசிய அருங்காட்சியகம், ராமேஸ்வரத்தில் ஒரு செய்தித்தாள் வியாபாரி முதல் இந்தியாவின் ஏவுகணை மனிதர் மற்றும் மிகவும் பிரபலமான ஜனாதிபதி வரை இந்தியாவின் ஏவுகணை மனிதனின் வாழ்க்கையின் கதையை விவரிக்கிறது.

ஹரியானாவை சேர்ந்த சுமன் - சோனேபட் திவான் அரோரா தம்பதி, தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திற்குப் புறப்பட்டபோது, அவர்களது பயணம் அவர்களை வேறொரு இடத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆம். அவர்கள் சென்ற அந்த புனித இடம் - மண்ணின் மகன் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் நினைவிடம். இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள தேசிய நினைவிடத்திற்குச் சென்ற அனுபவம் குறித்து ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரி சுமன் கூறுகையில், "எனக்கு அந்த இடத்தை விட்டு வெளியேற மனமில்லை என்று தெரிவித்தார்.
கலாமின் நினைவிடத்திற்கு நுழைய, தனது ஷூவை கழற்றிய தருணத்தில் தனக்குள் நேர்மறை ஆற்றலின் எழுச்சியை உணர்ந்ததாக சுமன் கூறினார். “நான் கோயிலுக்குச் சென்றுவிட்டு அந்த இடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்; அங்கே நான் வேறொரு புனிதமான இடத்திற்குள் நுழைந்ததை உணர்ந்தேன், ”என்று தெரிவித்தார்.
தென்னிந்தியாவிற்கான தனது முதல் பயணத்தில், ராமேஸ்வரம் மற்றும் மதுரை மீனாட்சி கோவில்களின் பிரம்மாண்டம் மற்றும் கட்டிடக்கலை தன்னை வியக்க வைத்தது போல், கலாமின் வாழ்க்கையின் எளிமை மற்றும் மகத்துவமும் தன்னை ஆச்சர்யபடுத்தியது ற்றி சுமன் கூறினார். “கோயில்களின் நம்பமுடியாத கட்டிடக்கலையைப் பார்ப்பது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அருங்காட்சியகத்தைப் பார்ப்பது அதற்கு துளியும் குறையவில்லை. இது ஒரு புனிதப் பயணம் போல இருந்தது.” என்று தெரிவித்தார்.
இந்த அருங்காட்சியகம் மற்ற இடங்களைப் போல பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், ராமேஸ்வரம் நகரத்தின் சுற்றுலா வரைபடத்தில் இந்த அருங்காட்சியகம் உள்ளது. பார்வையாளர்களுக்கு டூர் பேக்கேஜ்களை வழங்கும் உள்ளூர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் கூட, அருங்காட்சியகத்தை முதல் இடமாக பரிந்துரைக்கின்றனர்.
கலாமின் மருமகன் ஏபிஜேஎம்ஜே ஷேக் சலீம் இதுகுறித்து பேசிய போது, 2017 ஜூலை 27-ம் தேதி மோடி. பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த அருங்காட்சியகத்தை இதுவரை ஒரு கோடி பேர் பார்வையிட்டுள்ளனர். ஒரு நாளைக்கு குறைந்தது 7,000 பார்வையாளர்கள் இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிடுகிறார்கள், இதுவரை சுமார் ஒரு கோடி மக்கள் குடியரசுத் தலைவருக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர். முன்பு ராமேஸ்வரம் கோயிலை பார்க்க மக்கள் இந்த நகரத்திற்கு மக்கள் வந்தனர், ஆனால் இப்போது அப்துல் கலாமின் தேசிய நினைவகத்திற்கு பலர் வருகை தருகின்றனர். மதங்கள் அல்லது பிற தடைகளைத் தாண்டி இந்தியர்கள் டாக்டர் கலாமை எவ்வளவு நேசித்தார்கள் என்பதைப் பார்ப்பது மனதுக்கு நிம்மதி அளிக்கிறது.” என்று தெரிவித்தார்.
சுமன், அவரது கணவர் மற்றும் அவர்களது குழுவில் உள்ள பலர் நினைவிடத்திற்குள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் செலவிட்டனர். பார்வையாளர்கள் வெறுங்காலுடன் நுழைய வேண்டும் மற்றும் படங்களைக் கிளிக் செய்ய கேமராக்கள் அல்லது மொபைல்களைப் பயன்படுத்தக்கூடாது. இவை அனைத்தும் அந்த நினைவிடத்தின் புனிதத்தன்மையை அதிகரிக்கின்றன.
அருங்காட்சியகத்தைத் தவிர, ஏபிஜே அப்துல் கலாமின் சிறுவயது இல்லமும் அவரது மூத்த சகோதரர் பராமரிக்கும் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. "இது புகைப்படங்கள் மற்றும் குடும்ப நினைவுச்சின்னங்களின் சிறிய தொகுப்பு. நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 4,000 நபர்கள் இந்த இடத்திற்கு வருகை தருகின்றனர்” என்று ஷேக் சலீம் கூறினார்.
DRDOஆல் பராமரிக்கப்படும் தேசிய அருங்காட்சியகம், ராமேஸ்வரத்தில் ஒரு செய்தித்தாள் வியாபாரி முதல் இந்தியாவின் ஏவுகணை மனிதர் மற்றும் மிகவும் பிரபலமான ஜனாதிபதி வரை இந்தியாவின் ஏவுகணை மனிதனின் வாழ்க்கையின் கதையை விவரிக்கிறது. அதில் கலாம் ஈடுபட்ட ஏவுகணைகள், ராக்கெட்டுகள் மற்றும் பொக்ரான் அணு ஆயுத சோதனை ஆகியவற்றின் படங்கள் மற்றும் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. குடியரசு தலைவர் மாளிகையில், அவர் தினமும் காலையில் வெறும் தரையில் அமர்ந்து வாசித்த அவருக்கு மிகவும் பிடித்த வீணை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் 2002 முதல் 2007 வரை குடியரசு தலைவர் மாளிகையில் வாழ்ந்தார். அவர் மக்கள் குடியரசுத் தலைவர் என்ற பெயரைப் பெற்ற தேசத்தின் மிகவும் நேசிக்கப்பட்ட மற்றும் மரியாதைக்குரிய தலைவராக ஆனார். கலாம் விண்வெளி பொறியியலில் நிபுணத்துவம் பெற்ற மதிப்பிற்குரிய விஞ்ஞானி ஆவார். நாட்டிற்கு சேவை செய்வதில் அவரது எளிமை மற்றும் அர்ப்பணிப்பு பல இளைஞர்களை அவரது பாதையில் பின்பற்ற தூண்டியது. மேலும் அவர் இந்திய இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமான நபராக மாறினார். நினைவகத்தின் உள்ளே, தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள், ஓவியங்கள், ஏவுகணைகளின் சிறிய மாதிரிகள் போன்றவற்றைக் காணலாம். கலாமின் இந்த நினைவு இல்லம் ராமேஸ்வரத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது. இது மசூதி தெருவில் அமைந்துள்ளது மற்றும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கும்.
ஏ.பி.ஜே அப்துல் கலாம் ராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்து, விஞ்ஞானியாகி, டிஆர்டிஓ மற்றும் இஸ்ரோவில் பணிபுரிந்து இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அப்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்துல் கலாம், ஜூலை 27, 2015 அன்று ஐஐடி ஷில்லாங் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டபோது திடீரென காலமானார், ஜூலை 30 அன்று ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யப்பட்டர். டாக்டர் கலாம் தனது வாழ்நாள் முழுவதும் ராமேஸ்வரத்தின் எளிமை, ஆழம் மற்றும் அமைதியை எப்போதும் விரும்பினார். மேலும் அது அவரது நினைவிடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தேசிய நினைவகம் 27 ஜூலை 2017 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நினைவகம் 2.11 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. 120 கோடி ரூபாய் செலவில் 9 மாதங்களில் இந்த நினைவிடம் கட்டப்பட்டது. அப்துல் கலாமின் நினைவிடத்தை பார்வையிட்டவர்கள் மிகவும் உயர்வாக மதிப்பிட்டுள்ளனர். மக்கள் குடியரசுத் தலைவர் மறைந்த பிறகும் இந்தியர்களின் இதயத்தில் தொடர்ந்து இருக்கிறார் என்பதை ஆய்வுப் பகுதியில் அவர்களின் கருத்துக்கள் காட்டுகின்றன.
220 ஆண்டுகளாக பூட்டப்படாத வீடு.. தஞ்சையின் மற்றொரு வரலாற்று பொக்கிஷம்!
- abdul kalam
- abdul kalam house
- abdul kalam memorial
- abdul kalam quotes
- abdul kalam speech
- apj abdul kalam
- apj abdul kalam biography
- apj abdul kalam house
- apj abdul kalam last bench speech
- apj abdul kalam memorial
- apj abdul kalam motivational speech
- apj abdul kalam museum
- apj abdul kalam quotes
- apj abdul kalam speech
- apj abdul kalam status
- autobiography of apj abdul kalam
- dr apj abdul kalam