பாரதியார் பல்கலை வளாகத்திற்குள் புகுந்த ஒற்றை யானை...! காவலாளி அறைக்கு சென்றதால் அலறி அடித்து ஓடிய வாட்ச்மேன்
பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த ஒற்றை ஆண் காட்டு யானை காவலாளி அறையில் வைக்கப்பட்டிருந்த மாவு அரிசியை எடுத்து சாப்பிட்டது.இதனையடுத்து வனத்துறையினர் யானயை காட்டுக்குள் விரட்டியடித்தனர்.
கல்லூரிக்குள் புகுந்த காட்டு யானை
வனத்தை ஆக்கரமித்து கட்டிடங்கள், ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் கட்டப்பட்டு வருவதால் நாள்தோறும் வனப்பரப்பு அழிந்து கொண்டு வருகிறது. இதன் காரணமாக மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான மோதல் அதிகரித்து வருகிறது. உணவுக்காக ஊருக்குள் வரும் யானை, புலி, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகளை மனிதன் தாக்குவதும், மனிதனை வன விலங்குகள் தாக்குவதும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உணவு தேடி காட்டில் இருந்து வந்த காட்டு யானை ஒன்று பல்கலை பழக வளாகத்திற்குள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் நாள்தோறும் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் வருவது வழக்கம். தற்போது மருதமலை வனப்பகுதியில் 16 யானைகள் முகாமிட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் 14 யானைகள் ஐஓபி காலனி மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்தது.
கோ பேக் ராகுல்... ரயிலில் தூங்கிய ஆர்ஜூன் சம்பத்...! நள்ளிரவில் தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்
அலறி அடித்து ஓடிய காவலாளி
இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் யானை கூட்டத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்தது வளாகம் முழுவதும் சுற்றி வந்தது. இதனால் அங்கிருந்த மாணவர்கள் பயத்தில் அலறினர். யானை பல்கலைக்கழக நுழைவுவாயிலில் உள்ள காவலாளி அறையில் வைக்கப்பட்டிருந்த மாவு, மற்றும் அரிசியை எடுத்து சாப்பிட்டது. இதனால் பதற்றம் அடைந்த பல்கலைக் கழக காவலாளி மற்றும் அருகில் இருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் ஒற்றை யானையை சத்தம் எழுப்பி மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினார். இதனையடுத்து பாரதியார் பல்கலை கழக வளாகத்தில் இருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர்.
இதையும் படியுங்கள்