கோ பேக் ராகுல்... ரயிலில் தூங்கிய ஆர்ஜூன் சம்பத்...! நள்ளிரவில் தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்

தமிழகத்தில் பாதயாத்திரையை ராகுல்காந்தி தொடங்கவுள்ள நிலையில் எதிர்ப்பு தெரிவிக்க கன்னியாகுமரி சென்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தை போலீசார் கைது செய்துள்ளனர். 
 

Arjun Sampath who went to protest against Rahul Gandhi's visit was arrested

ராகுல் பாதயாத்திரை தொடக்கம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை இன்று தொடங்குகிறார். இன்று மாலை 4 மணிக்கு கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபம் முன்பு தனது நடை பயணத்தை தொடங்கும் ராகுல்காந்தி, 150 நாட்களில் 3500 கி.மீ தூரம் நடந்து செல்லத் திட்டமிட்டுள்ளார்.  ராகுல்காந்தி நடை பயணத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். குமரி மாவட்டத்தில் மட்டும் 10-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, 11-ம் தேதி காலை கேரளாவில் பயணத்தை தொடர்கிறார். தினமும் 18 முதல் 20 கிலோ மீட்டர் வரை அவர் நடைபயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக நேற்று இரவு சென்னை வந்த ராகுல்காந்தி இன்று காலை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு செல்வுள்ளார். 

எம்.ஏல்.ஏக்களுக்கு ஸ்டாலின் கடிதம்.! ஆட்சியரிடம் மனு கொடுத்த எஸ்.பி வேலுமணி.! முதல் 10 கோரிக்கை என்ன தெரியுமா?

Arjun Sampath who went to protest against Rahul Gandhi's visit was arrested

ராகுல் காந்திக்கு எதிர்ப்பு

இந்தநிலையில் ராகுல் காந்தியின் தமிழக பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோ பேக் ராகுல் என அர்ஜூன் சம்பத் தொடங்கினார். தனது டுவிட்டர் பதிவில் கோ பேக் மோடி இயக்கம் நடத்திய திமுக இன்று 'கோ பேக் ராகுல்' என்ற இயக்கத்தை நடத்துவதற்கு ஏன் தடை செய்கிறது? உங்களுக்கு மட்டும்தான் கோ பேக் இயக்கம் நடத்த உரிமை உள்ளதா முதல்வர் அவர்களே? என கேள்வி எழுப்பியிருந்தார்.  தமிழகம் வரும் பிரிவினைவாத கட்சியின் இளவரசர் ராகுலுக்கு கருப்புக்கொடி காட்டும் பதாகைகள், போஸ்டர்களை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

 

 மேலும் இந்து மக்கள் கட்சியினர் மிரட்டப்படுகிறார்கள்! காவல்துறை என்ன திமுக அரசின் ஏவல்துறையா? என குற்றம்சாட்டியிருந்தார். இந்தநிலையில்,  கன்னியாகுமரி யாத்திரை தொடங்கும் பகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக கறுப்பு கொடி காட்ட திட்டமிட்ட அர்ஜூன் சம்பத், கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் கன்னியாகுமரிக்கு சென்று கொண்டிருந்தார். 

சென்னை வந்தடைந்தார் ராகுல் காந்தி... காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!!

Arjun Sampath who went to protest against Rahul Gandhi's visit was arrested

அர்ஜூன் சம்பத் கைது

இந்த தகவல் போலீசாருக்கு கிடைத்ததையடுத்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் காத்திருந்த போலீசார் அர்ஜூன் சம்பத்தை கைது செய்தனர். சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணத்தின் போது  போலீசார் கைது செய்தது தொடர்பாக கருத்து தெரிவித்த அர்ஜூன் சம்பத், நள்ளிரவில் சுற்றிவளைத்து கைது செய்தது மட்டுமல்லாமல் அடிப்படை வசதிகளையும் தரமறுத்து மனரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் திமுக அரசு! தமிழின துரோகி ராகுலுக்கு வரவேற்பு! இந்துக்களுக்காக பாடுபடும் தலைவருக்கு சிறை! என பதிவு செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்
அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி திடீர் ஆய்வு..! சிக்கலில் ஓபிஎஸ்... காரணம் என்ன..?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios