Asianet News TamilAsianet News Tamil

இலங்கையில் இருந்து தமிழகம் வந்த பெண் அகதி..! கடற்கரையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டவர் திடீர் உயிரிழப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு காரணமாக தமிழகம் வந்த இலங்கை அகதி ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

A female refugee who came to Tamil Nadu from Sri Lanka Sudden death while unconscious on the beach
Author
Madurai, First Published Jul 3, 2022, 2:16 PM IST

 இலங்கையில் பொருளாதார பாதிப்பு

இலங்கையில் பொருளாதார பாதிப்பு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் கடந்த 6 மாதங்களில் தமிழகம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். இலங்கையில் விலைவாசியும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. வேலை வாய்ப்பும் இல்லாத நிலை நீடிக்கிறது. ஒரு டீயின் விலை 110 ரூபாயை தொட்டுள்ளது. இதே போல அரிசி, பருப்பு,பால், சமையல் எரிவாயு விலையும் அதிகரித்துள்ளது. பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசல் கிடைக்காத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே இலங்கையில் தற்போது மோசமான நிலை நீடித்து வருவதால் இலங்கையை சேர்ந்தவர்கள் அகதிகளாக பல நாடுகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இலங்கையில் ஏற்பட்ட போருக்கு பிறகு தற்போது தமிழகம் வரும் அகதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 

திமுக கட்சி விளம்பரங்களில் புறக்கணிக்கப்படும் உதயநிதி ஸ்டாலின்..! அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்

மேம்பால பணியில் புதையல்.! பழங்காலத்து நகைகளை காட்டி ஓட்டல் உரிமையாளருக்கு விபூதி அடித்த வட மாநில கும்பல்

A female refugee who came to Tamil Nadu from Sri Lanka Sudden death while unconscious on the beach

பெண் அகதி உயிரிழப்பு

இதனிடையே இலங்கையில் இருந்து கடந்த 27ஆம் தேதியன்று இலங்கை மன்னார் பகுதியை  சேர்ந்த பரமேஸ்வரி - பெரியண்ணன் என்ற வயதான தம்பதியினர் அகதிகளாக தனுஷ்கோடி அருகே கடற்கரையில் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதனையடுத்து இருவரின் உடல்நலம் குறித்து பரிசோதித்தபோது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 27ஆம்தேதியே அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை பரமேஸ்வரி (70) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. இதனிடையே பரமேஸ்வரியின் கணவன் பெரியண்ணன் தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தமிழகத்திற்கு அகதிகளாக வந்த வயதான தம்பதியரின் ஒருவரான பரமேஸ்வரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

அலர்ட்!! குறைந்த விலையில் மளிகை பொருட்கள்... வெளிசந்தையை விட குறைவு.. அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு..

 

Follow Us:
Download App:
  • android
  • ios