பெண் கொலை தொடர்பாக பொய்யான தகவல்.!! அண்ணாமலை மீது வழக்குப்பதிவு.. அதிரடியாக வீடியோ வெளியிட்டு பதிலடி

நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவிற்கு வாக்களித்ததற்காக பெண் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், பொய்யான தகவலை வெளியிட்டுள்ளதாக கூறி அண்ணாமலை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 

A case has been registered against Annamalai for publishing false information regarding the murder of a woman KAK

வாக்குவாதம் -பெண் கொலை

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதல்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின் போது பாஜகவிற்கு வாக்களித்ததற்காக பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில்,

கடலூர் மாவட்டம் காவல்துறை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் இரு தரப்பினருக்கும் ஏற்கனவே உள்ள வழக்கு தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாகவும் இதனையடுத்து வாக்குப்பதிவு தினத்தில் மோதல் ஏற்பட்டதில் கோமதி என்ற பெண் கீழே விழுந்து இறந்து விட்டதாக கூறப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் பாஜகவிற்கு வாக்களித்ததால் பெண் கொலை செய்யப்பட்டார் என்ற தகவலில் உண்மை இல்லையென தெரிவிக்கப்பட்டிருந்தது.

பழங்குடியின பெண் வைத்த பொட்டை அண்ணாமலை அழித்தது ஏன்.? வீடியோ வெளியிட்டு கேள்வி கேட்கும் காயத்ரி ரகுராம்

A case has been registered against Annamalai for publishing false information regarding the murder of a woman KAK

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

இதனையடுத்து தவறான தகவலை வெளியிட்ட காரணத்திற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது ஶ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கலவரத்தை தூண்டு நோக்கம் (153)அமைதியை சீர்குலைத்தல்(504)குழப்பத்திற்கு வழிவகுக்கும் அறிக்கைகள்(505) ஆகிய பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதே போல வடமாநில நபர் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அண்ணாமலை தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

A case has been registered against Annamalai for publishing false information regarding the murder of a woman KAK

வீடியோ வெளியிட்ட அண்ணாமலை

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த சகோதரி கோமதி அவர்கள், திமுக கூட்டணி கட்சிக்கு வாக்களிக்காத காரணத்தினால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்துப் பதிவிட்டதற்கு, என் மீது காவல்துறையினரை ஏவி விட்டு, பாசிச திமுக அரசு ஒரு வழக்கை பதிவு செய்திருப்பதாக அறிகிறேன். திமுக மறைக்கத் துடித்த உண்மை இதோ. பாஜகவுக்கு வாக்களித்த காரணத்திற்காகத் தான், சகோதரி கோமதி அவர்கள் கொலை செய்யப்பட்டார் என்பதை,  அவரது கணவர் திரு ஜெயக்குமார் மற்றும் அவரது சொந்தங்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள். முன்விரோதம் என்பது திமுகவின் சப்பைக்கட்டு நாடகம் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.  

 

திமுக பகல் கனவு

ஊழல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பொதுமக்களுக்காக நாங்கள் முன்னெடுத்த மக்கள் போராட்டங்களுக்கு, என் மீது பல வழக்குகள் தொடுத்திருக்கிறார்கள். அவ்வளவு ஏன்? தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  அவர்களே என் மீது இரண்டு வழக்குகள் தொடுத்திருக்கிறார்.  இவ்வாறு பொய்யான வழக்குகள் தொடுத்து எங்கள் குரல் வளையை நசுக்கி விடலாம் என்று திமுக பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறது.  உங்கள் பாசிச ஆட்சி முடிவுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை மறந்து விட வேண்டாம் என தெரிவித்துள்ளார். 

Cuddalore Murder : பாஜக கூட்டணிக்கு ஓட்டு போட்டதால் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா.? உண்மை தகவல் என்ன.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios