பாலியல் குற்றங்கள்.! தண்டனை அதிகரிப்பு - எந்த குற்றத்திற்கு எத்தனை வருடம் சிறை - வெளியான லிஸ்ட்

தமிழக சட்டப்பேரவையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்கும் சட்ட திருத்த மசோதாவை முதலமைச்சர் தாக்கல் செய்தார். பாலியல் வன்கொடுமை, பெண்களைப் பின்தொடர்தல், அமில வீச்சு உள்ளிட்ட குற்றங்களுக்கான தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

A bill has been tabled in the Tamil Nadu Legislative Assembly to increase the punishment for sexual offences KAK

மாணவி பாலியல் வன்கொடுமை

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டது. இதனையடுத்து இந்த சம்பவத்தில் குற்றவாளியான ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையிலும் அதிமுக கருப்பு சட்டை அணிந்தும், யார் அந்த சார் என்ற கேள்வி எழுப்பியும் வருகின்றனர். இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் சட்ட முன்வடிவ தாக்கல் செய்தார். அதில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்களில் ஏற்கனவே உள்ள தண்டனைகளை கடுமையாக்கி சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தண்டனை அதிகரிப்பு

இதன் படி  பிரிவு - 64 ( 1 ) பாலியல் வண்புணர்ச்சி குற்றத்திற்கு  ஏற்கனவே  10 ஆண்டுக்கு குறையாத  கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது  14 ஆண்டுக்கு குறையாக கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிவு 64 ( 2) காவல் துறை ஊழியர் மற்றும் அவரது நெறுங்கிய உறவினரால் பாலியல் வண்புணர்ச்சி குற்றத்திற்கு ஏற்கனவே 10 ஆண்டுக்கு குறையாத  கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், தற்போது  20  ஆண்டுக்கு குறையாக கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பெண்ணை பின் தொடர்ந்தால் சிறை

பிரிவு 78 ( 2) பெண்ணை பின் தொடர்தல் குற்றத்திற்கு  இதற்கு முன்பாக தண்டனை இல்லாத நிலையில் தற்போது  முதல் முறை 5 ஆண்டு  சிறை தண்டனையும், இரண்டாம் முறை 7 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்ததாக பிரிவு 65 ( 2) 12 வயதுக்குட்பட்ட பெண்ணை வன்புணர்ச்சி குற்றத்தை செய்கின்ற நபர்களளுக்கு ஏற்கனவே 20 ஆண்டுக்கு குறையாத கடுங்காவல் அல்லது ஆயுள் சிறை தண்டனை, மரண தண்டனை வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. 

மரண தண்டனை

பிரிவு 70 (2) கூட்டு வன்புணர்ச்சி மற்றும் 18 வயதுக்குட்பட்ட பெண்ணை கூட்டு வன்புணர்ச்சி குற்றத்திற்கு இதற்கு முன்பாக ஆயுள் சிறை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது  மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பிரிவு 66 வன்புணர்ச்சி மற்றும் மரணத்தை விளைவிக்கும் குற்றத்தை செய்யும் நபர்களுக்கு இதற்கு முன்பு  20 ஆண்டுகளுக்கு குறையாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது  ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அடையாளத்தை வெளிப்படுத்தினால் சிறை

மீண்டும் மீண்டும் குற்றம் இழைத்த குற்றவாளிகளுக்கு இதற்கு முன்பாக ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது  மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பிரிவு 72 (1) பாலியல் உள்ளிட்ட  சில குற்றங்களில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்துதல்  குற்றங்களுக்கு இதற்கு முன்பு - 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது மூன்று ஆண்டுகளுக்கு குறையான அல்லது 5 ஆண்டுகள் வரை நீட்டிப்பு ,செய்யப்பட்டுள்ளது. பிரிவு 72 (1) 

 பிரிவு 74 பெண்ணின் கண்ணியதை அவமதிக்கும் உட் கருத்துடன் தாக்குதல் அல்லது பலத்தை பயன்படுத்துதல் குற்றத்திற்கு இதற்கு முன்பாக  1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது  3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரிவு 75 பாலியல் தொல்லை மற்றம் பாலியல் தொல்லைக்கான தண்டனைக்கு இதற்கு முன்பு - 3 ஆண்டுகள் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரிவு - 76 பெண்ணின் ஆடையை அகற்றும் உட் கருத்துடன் தாக்குதல் குற்றவாளிகளுக்கு இதற்கு முன்பாக  3 ஆண்டு முதல் 7 ஆண்டு வரை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது  5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை சிறை தண்டனை உயர்த்தப்பட்டுள்ளது.


அமிலம் வீச்சு - தண்டனை அதிகரிப்பு

பிரிவு 77 மறைந்து காணும் பாலியல் கிளர்ச்சி குற்றத்திற்கு ஏற்கனவே 1 முதல் 3 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்பட்ட நிலையில்,  தற்போது - 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரிவு 124 ( 1) அமிலம் வீச்சு குற்றத்திற்கு 10 முதல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆயுள் முதல் மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. பிரிவு 124 ( 2) அமிலம் வீச முயற்சி குற்றத்திற்கு  ஏற்கனவே 5 முதல் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது - 10 முதல் ஆயுள்தண்டனை வழங்கும் வகையில் சட்டம் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios