Asianet News TamilAsianet News Tamil

சென்னை அரசு மருத்துவமனையில் 77 ஆண்டுகளாக சிறப்பாக செயல்படும் வாஷிங் மெஷின்..

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 77 ஆண்டுகள் பழமையான சலவை இயந்திரம் இன்னும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

77 year old washing machine still going strong in chennai rajiv gandhi hospital Rya
Author
First Published Feb 5, 2024, 12:49 PM IST

தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை திகழ்கிறது. சென்னையில் உள்ள இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மட்டும் குணமடைந்து செல்வதில்லை. 77 ஆண்டுகள் பழமையான வாஷிங் மெஷினும் இன்னும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த சில மாதங்களில் பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த இயந்திரம் தற்போது வரை மருத்துவமனையின் அழுக்கு துணிகளை எந்த சிக்கலும் இன்றி துவைத்து வருகிறது. பல நவீன இயந்திரங்கள் பழுதடைந்துள்ள நிலையில், இந்த இயந்திரம் குறைபாடற்ற முறையில் இயங்கி வருகிறது. 

இந்த இயந்திரம் பழையதாகத் தோன்றினாலும், அதன் நிறம் மங்கிவிட்டாலும், புதிய இயந்திரங்களை விட இது இன்னும் சிறப்பாக இயங்குவதாக இங்கு பணிபுரியும் ஊழியர்கள் கூறுகின்றனர். டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

தருமபுரியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு? அதிமுக பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு

இந்த மருத்துவமனியில் மேலும் மூன்று பிரிட்டிஷ் இறக்குமதி இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதாகவு அவற்றையும் சரி செய்ய வேண்டும் என்று தொழிலாளர்கள் விரும்புகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனை 1664 இல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தால் நிறுவப்பட்டது. ஆனால் இந்த இயந்திரத்தை நாட்டிங்ஹாமில் உள்ள JW லைட்பர்ன் அண்ட் சன்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஆர்டர் செய்தது யார் என்பது குறித்து எந்த பதிவும் இல்லை.

இந்த இயந்திரங்களை யார் ஆர்டர் செய்தார்கள் என்பது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கே தெரியவில்லை, ஆனால் அந்த காலத்தில் நிர்வாகிகள் இந்த இயந்திரத்தை ஆர்டர் செய்திருக்க வேண்டும் என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மருத்துவமனையில் மற்றொரு பிரிட்டிஷ் நிறுவனமான லிஸ்டர் பிரதர்ஸ் லிமிடெட் தயாரித்த சுதந்திரத்திற்கு முந்தைய மூன்று பழைய இயந்திரங்கள் மருத்துவமனையின் படுக்கை விரிப்புகள் துவைத்தன. ஆனால் இந்த இயந்திரங்கள் தற்போது பழுதடைந்துள்ளதால், சிறப்பு திட்டமாக இவற்றை சீரமைக்க பொறியியல் கல்லூரிகளுக்கு மருத்துவமனை டீன் டாக்டர் இ.தேரணிராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர் உதிரி பாகங்கள் கிடைக்கவில்லை என மெக்கானிக்கள் கூறுகின்றனர், ஆனால். அவற்றை சரிசெய்ய வாய்ப்பு இருந்தால், அந்த வாய்ப்பை நாங்கள் தவறவிட மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

சலவை செய்யும் ஊழியர்கள் இதுகுறித்து பேசிய போது “ தற்போது செயல்படும் வாஷிங் மெஷின் ரோலர் போல் இருக்கும். நெம்புகோலைத் தள்ளி சக்கரத்தைத் திருப்பித் திறந்து மூட வேண்டும்  ஆனால் அதில் 150 பெட்ஷீட்கள் வைக்க நான்கு பெட்டிகள் உள்ளதாகவும், துவைத்த பின் எளிதில் கழற்ற முடியும் என்று தெரிவிக்கின்றனர். நவீன சலவை இயந்திரங்களில் 200 படுக்கை விரிப்புகளை துவைக்க முடியும் என்றாலும், துவைத்த பின் அவற்றை வெளியே எடுப்பது மிகவும் கடினம். என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தினமும் காலையில், மருத்துவமனையின் சலவை அறை இந்த வாஷின் மெஷின் இயங்குகிறது. மெஷின் ஆபரேட்டர் குணசேகரன் இதுகுறித்து பேசிய போது "இந்த இயந்திரங்கள் விரைவாகவும் எளிதாகவும் செலவு குறைந்ததாகவும் வேலை செய்கின்றன," என்று அவர் கூறுகிறார். 80 டிகிரி செல்சியஸ் வெந்நீரில் இயந்திரத்தின் உள்ளே துணிகள் ஊறவைக்கப்படுகின்றன, ஒவ்வொரு சுழற்சியும் 30 நிமிடம் துவைக்க வேண்டும். பின்னர் "உடைகள் ஒரு டிரம் போன்ற கொள்கலனில் போடப்படுகின்றன, இது அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றுகிறது. 15 நிமிடங்களுக்குப் பிறகு, இந்த ஆடைகள் வெயிலில் உலர எடுக்கப்படுகின்றன." என்று தெரிவித்தார்.

லீவுக்கு சென்ற பள்ளி மாணவியை சொந்த அத்தையே பாலியல் தொழிலில் தள்ளிய கொடுமை.. அதிர்ச்சி சம்பவம்..

சலவை அறையின் பொறுப்பாளரும், செவிலியருமான செவிலியர் மாலா பேசிய போது “ பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மற்ற மூன்று இயந்திரங்களும் செயல்படாமல் நின்றதால், நான்கு ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மூலம் மூன்று புதிய வாஷின் மெஷின்களை மருத்துவமனை வாங்கியது. அவற்றில் இரண்டு ஏற்கனவே சேதமடைந்துள்ளன. புதிய இயந்திரங்கள் மிகவும் அழகானதாகவும் மலிவானதாகவும் இருந்தாலும் பழைய இயந்திரங்கள் மிகவும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

மேலும், புதிய இயந்திரங்கள் ஒரே நேரத்தில் 200 படுக்கை விரிப்புகளை துவைக்கமுடியும்., ஆனால் அதில் தனித்தனி பெட்டிகள் இல்லை. எனவே அனைத்து துணிகளும் ஒரே ரோலரில் துவைக்கப்படுகின்றன. அவற்றை வெளியே எடுப்பதில் தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர்.புதிய இயந்திரங்களைப் பயன்படுத்தும் தொழிலாளர்கள் பெரும்பாலும் முதுகுவலி இருப்பதாக கூறுகின்றனர்” என்று தெரிவித்தார். எனினும் பழைய வாஷிங் மெஷின்களை சரி செய்ய எங்காவது பொறியாளர்கள் இருப்பாவர்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் நம்புகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios