Asianet News TamilAsianet News Tamil

தருமபுரியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு? அதிமுக பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு

தருமபுரியில் அதிமுக சார்பில்  வைக்கப்பட்ட  பேனர்கள்,  கொங்கு எழுச்சி மாநாட்டிற்காக வைக்கப்பட்ட பேனர்களை மர்ம நபர்கள் கிழித்து சென்றதால் பரபரப்பு.

aiadmk general secretary edappadi palaniswami banner and poster damaged by suspicious persons in dharmapuri vel
Author
First Published Feb 5, 2024, 12:33 PM IST

தருமபுரி மாவட்டம் அரூரில் கொங்கு பல்நோக்கு பண்பு பயிற்சி கட்டிடம் கட்டப்பட்டு, கட்டிடத்தை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று திறந்து வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ணன், கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 

இவர்களை வரவேற்கும் விதமாக அதிமுக சார்பில் அரூர் நகர்  பகுதிகளிலும், நாச்சினாம்பட்டி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் கட்சி பேனர்கள் மற்றும் கொங்கு மக்கள் சார்பில் கொங்கு எழுச்சி மாநாட்டிற்காக  பேனர்கள் கட்டப்பட்டு இருந்தன. 

அவரு யோசிக்காம எந்த முடிவும் எடுக்க மாட்டார்; விஜய்யின் அரசியல் பயணம் குறித்து நடிகர் பாலா நச் பதில்

அரூர் காவல் நிலையம், ரவுண்டானா, திரு வி க நகர், சின்னாங்குப்பம், நாச்சினாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் வைக்கப்பட்ட விளம்பர பேனர்களும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் கொங்கு இளைஞர் பேரவை சார்பில் வைக்கப்பட்ட பேனர்களும் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே கடந்த காலங்களில் அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு அணியாக பிரிந்த நிலையில் ஓபிஎஸ் அணி சார்பில் கட்டப்பட்ட பேனர்கள் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டன.

இமாச்சலில் சட்லஜ் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து: சைதை துரைசாமி மகன் மாயம்

பேனர்கள் வைக்கும் போதெல்லாம் தொடர்ச்சியாக கிழிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த ஓபிஎஸ் தரப்பினர் காவல் நிலையத்தில் இது குறித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், பேனர்களை கிழித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் எடப்பாடி கே.பழனிசாமி இன்று அரூர் பகுதிக்கு வருகை புரிவதால் அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட பேனர்களும், கொங்கு மக்கள் சார்பில் வைக்கப்பட்ட பேனர்களும் கிழிக்கப்பட்ட இந்த நிகழ்வு தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios