Asianet News TamilAsianet News Tamil

சென்னை மக்களே அலர்ட்.. நாளை 53 ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே முக்கிய தகவல்..

சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையிலாலன மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

53 chennai sub urban trains cancelled on october 31 due to maintenance work Rya
Author
First Published Oct 30, 2023, 9:06 AM IST

சென்னை புறநகர் ரயிலில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சென்னையில் பிரதான பொது போக்குவரத்து சேவையாக புறநகர் சேவை உள்ளது. வேலைக்கு செல்வோர், கல்லூரி மாணவ, மாணவிகள் பெரும்பாலும் இந்த மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையிலாலன மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் ரயில்கள் காலை 10.18 முதல் பிற்பகல் 2.45 வர முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதே போல் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயிகள் காலை 9.08 முதல் பிற்பகல் 3.20 வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 2.20 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.30 புறப்படும் ரயில், திருமால்பூரில் இருந்து காலை 11.05க்கு புறப்படும் ரயில்களும், செங்கல்பட்டில் இருந்து காலை 10 ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தாம்பரம் – செங்கல்பட்டு இடையே பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தாம்பரம் – செங்கல்பட்டு இடையே காலை 11.51, பகல் 12.35, 1.15, 1.35, 1.55, பிற்பகல் 2.45, 3.10, 3.30 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதே போல் செங்கல்பட்டு – தாம்பரம் இடையே காலை 9.30, பகல் 12.00 மணி, 1.00 மணி, 1.15 மணி, பிற்பகல் 2.20 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios