ஆட்டு கொட்டகைகளில் புகுந்த மர்ம விலங்கு.! துடி துடித்து பலியான 35 உயிர்கள்- கதறும் விவசாயி
நள்ளிரவில் ஆட்டுக்கொட்டகையில் புகுந்த தெரு நாய்கள் 32 ஆடுகளை கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயி அண்ணாமலை தனது 70 ஆடுகளை கொட்டகையில் அடைத்துவிட்டு சென்ற நிலையில், நள்ளிரவில் நாய்கள் தாக்கியதில் 32 ஆடுகள் பலியாகின.

நள்ளிரவில் அலறிய ஆடுகள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் அருகே உள்ள ஏந்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை என்ற விவசாயி, தனது விவசாய நிலத்தில தினமும் 70-க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். தினமும் பகல் முழுவதும் ஆடுகளை மேய்த்து விட்டு மாலை வேளையில் விவசாய நிலத்தில் கட்டப்பட்டுள்ள ஆட்டு கொட்டகைகளில் ஆடுகளை அடைத்து விடுவார். இதேபோல நேற்று இரவு ஆடுகளை மேய்த்து விட்டு ஆட்டு கொட்டகைகளில் ஆடுகளை அடைத்து விட்டு அண்ணாமலை வீட்டிற்கு உறங்க சென்றார்.இதனிடையே நள்ளிரவு நேரத்தில் ஆடுகளின் கூச்சல் சத்தம் அதிகரித்து கேட்கவே வீட்டிலிருந்து ஆட்டு கொட்டகைக்கு நோக்கி அண்ணாமலை ஓடி சென்று பார்த்தார்.
ஆடுகளை கடித்து குதறிய நாய்கள்
அப்போது தெரு நாய்கள் வெறிபிடித்து ஆடுகளை கடித்து குதறிக் கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து நாய்களை அடித்து விரட்டினார். ஆட்டுக்கோட்டைக்கு வந்த நாய்களை விரட்டுவதற்குள் 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் 32 ஆடுகளை கடித்து குதறி உள்ளது. இதில் 32 ஆடுகள் துடி துடித்து அங்கங்கே உடல்கள் இறந்து சிதறிக் கிடந்தன. மீதம் இருந்த ஆடுகளும் நாய்களுக்கு பயந்து அலறியது. அதே நேரத்தில் அண்ணாமலையையும் நாய்கள் கடிக்க பாய்ந்தது. அதிர்ச்சடைந்த அண்ணாமலை கூச்சலிட்டு மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தெரு நாய்களை விரட்டினர்.
கதறும் விவசாயி
நாய்கள் கடித்து ஆடுகள் தகவல் அறிந்து களம்பூர் சுகாதாரத் துறையினர் மற்றும் கால்நடை துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த ஆடுகளை பரிசோதனை செய்து உரிய விசாரணை நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி களம்பூர் போளூர் சேத்துப்பட்டு கண்ணமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டு வருவதால் வீதிகளில் பொதுமக்கள் நடமாடவே அச்சப்படும் நிலை உருவாகிவிட்டது. எனவே நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.