கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

3 persons killed at electric shock in kanyakumari district vel

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் 2 தினங்களாக மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆற்றூர் அடுத்த தோப்புவிளை பகுதியைச் சேர்ந்த சேம் என்பவரின் வீட்டின் அருகில் அமைக்கப்பட்டு இருந்த தகரக் கூரை காற்றில் சற்று சரிந்துள்ளது. இதனால் சேம் அதனை இரும்பி கம்பிக் கொண்டு சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது தகரக் கூரையின் மீது மின்சார ஒயர் ஒன்று அறுந்து கிடந்துள்ளது. இதனை அறியாமல் சேம் இரும்பு கம்பி கொண்டு தகரக் கூரையை சரி செய்த நிலையில் அவர் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் சேம் அலறவே, சத்தம் கேட்டு வெளியில் ஓடி வந்த தாய் ஜெயசித்ரா, சகோதரி (8 மாத கர்ப்பிணி) ஆதிரா ஆகியோர் சேமை காப்பாற்ற முற்பட்டுள்ளனர்.

உறவினருடன் சண்டையிட்டு வெளியேறிய இளம்பெண்; நம்பவைத்து ஆசையை தீர்த்துக்கொண்ட காமுகன்கள்

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஆனால் அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்து கூச்சலிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர், மின்சாரம் பாய்வதை அறிந்து உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மின்சாரம் தாக்கி சுயநினைவின்றி கிடந்த மூவரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அடிச்சு ஊத்தும் கனமழை.. அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறையை அறிவித்த மாவட்ட ஆட்சியர்!

அவர்களை பரிசோதித்த மருத்துவர், மூவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மூவரின் உடல்களையும் கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios