வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என பாலசந்திரன் கூறியுள்ளார். 

வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் வடக்கு, மத்திய வங்க கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பொள்ளாச்சியில் 10 செ.மீ., மழையும், சின்னக்கல்லாறில் 9 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது என பாலசந்திரன்  கூறினார்.

கேரளாவில் கடந்த சில வாரங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த பருவ மழை கேரளாவை புரட்டிபோட்டுள்ளது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் கேரளாவில் 3 நாட்கள் மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் பீதி அடைந்துள்ளனர்.