2 ஆயிரம் சிறு, குறு நிறுவனங்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தம் அறிவிப்பு.. சுமார் ரூ.500 கோடி இழப்பு..
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பொருள்கள் மற்றும் ஜாப் ஆர்டர்களுக்கு உரிய நியாயமான விலையை நிர்ணயம் செய்யக்கோரி 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்துள்ளது.
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பொருள்கள் மற்றும் ஜாப் ஆர்டர்களுக்கு உரிய நியாயமான விலையை நிர்ணயம் செய்யக்கோரி 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்துள்ளது.
மேலும் படிக்க:பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்: சிங்கப்பூரின் 3 செயற்கைக்கோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று விண்ணுக்கு ஏவப்படுகிறது
மேலும் படிக்க:bank Privatisation news: பொதுத்துறை வங்கிகளுக்கு முழுக்கு: சட்டத்திருத்தம் கொண்டு வருகிறது மத்திய அரசு
மேலும் படிக்க:மிக குறைந்த விலையில் புது மாருதி சுசுகி பிரெஸ்ஸா அறிமுகம் - எவ்வளவு தெரியுமா?
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ஹோஸ்டியா சங்க தலைவர், ,” சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் உற்பத்தி செலவு கடந்த 15 ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்து விட்டது. இந்த தொழில் நிறுவனங்கள் சுமார் 1 லடத்துத்து 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கிறது. ஓசூரில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு , நடுத்தர தொழில் நிறுவனங்கள் வாகன உதிரி பாகங்கள் மற்றும் இதர பொறியியல் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த துறையின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி ஏழை, எளிய மக்களின் வாழ்வில் பிரதிபலிக்கும். சமீப காலமாக குறிப்பாக இயந்திரங்களின் விலை, எரிப்பொருள் விலை, மூலப்பொருள் விலை, பராமரிப்பு விலை, தொழிலாளர்களின் ஊதியம், மின் கட்டணம் உள்ளிட்டவை பன்மடங்கு உயர்ந்துள்ளது.ஏற்கனவே கொரோனா நெருக்கடி, பொதுமுடக்கம் காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன.
சுமார் 200 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செய்து தரும் ஜார் ஓர்க்கிற்கு பெரிய தொழில் நிறுவனங்கள் நியாயமான விலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜூலை 13, 14 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளோம் என்று கூறினார். இந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் மூடப்படுவதால் ரூ.500 கோடி உற்பத்தி பாதிக்கப்படும் என்று கூறினார்.