bank Privatisation news: பொதுத்துறை வங்கிகளுக்கு முழுக்கு: சட்டத்திருத்தம் கொண்டு வருகிறது மத்திய அரசு
பொதுத்துறை வங்கிளை தனியார்மயமாக்குவதை எளிதாக்குகம் வகையில் வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மத்திய அ ரசு வங்கி முறையிலிருந்தே முழுவதுமாக வெளியேறத் திட்டமிட்டுள்ளது. நாட்டில் பொதுத்துறை வங்கிகளே இருக்காது, வங்கித்துறையிலிருந்தே அரசு வெளியேறுவதற்கு இந்தச் சட்டத்திருத்தம் அனுமதிக்கும் என்று ஆங்கில நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கிளை தனியார்மயமாக்குவதை எளிதாக்குகம் வகையில் வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் பொதுத்துறை வங்கிகளே இருக்காது, வங்கித்துறையிலிருந்தே அரசு வெளியேறுவதற்கு இந்தச் சட்டத்திருத்தம் அனுமதிக்கும் என்று ஆங்கில நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.
எளிதாகத் தொழில் செய்ய ஏற்ற மாநிலங்கள்: ஆந்திரா, தெலங்கனா, குஜராத் டாப் கிளாஸ்
வங்கிளை இணைப்பதற்கும், பங்குகளை விற்பதற்கும் வங்கி ஊழியர்கள் சங்கங்கள், அதிகாரிகள் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் வங்கித் துறையிலிருந்தே அரசு வெளியேறுவதாக முடிவு செய்தால், நிலைமை இன்னும் மோசமாகும்.
வங்கி நிறுவனச் சட்டம் 1970ன்படி, மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளில் குறைந்தபட்சம் 51 சதவீத பங்குகளை வைத்திருத்தல் அவசியம். ஆனால், தனியார் மயமாக்கலின்போது, அரசு சார்பில் 26சதவீத பங்குகள் மட்டும் வைக்கப்பட்டது. இப்போது அதுவும் படிப்படியாகக் குறைக்கப்பட உள்ளது.
மழைக்காலக் கூட்டத்தொடருக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 2021ம் ஆண்டு குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்த வங்கிச்சட்டத்திருத்தத்தை மத்திய அரசு தயாரித்தது ஆனால், அறிமுகப்படுத்தவில்லை. வங்கி நிறுவனங்கள் சட்டம் 1970 மற்றும் 1980களிலும், வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949 ஆகியவற்றிலும் திருத்தம் செய்யப்படலாம் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
RBI:ஜூலையில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை: பட்டியலை வெளியிட்டது RBI
ஐடிபிஐ வங்கியின் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய இருக்கிறது. இந்த வங்கியின் பங்குகளை விற்பனை செய்வதன் போது நடந்த ஆலைசனையின் அடிப்படையில் முக்கியமான விவாதங்கள் எழுந்தபோது வங்கிச்சட்டத்திருத்தம் முடிவானது. பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கினாலும் அரசிடம் எவ்வளவு பங்குள் இருக்கலாம் என்பது குறித்து ரிசர்வ் வங்கியிடம் நிதிஅமைச்சகம் பேச்சு நடத்தி வருகிறது. தனியார் வங்கிகளில் தற்போது புரமோட்டர்கள் 26சதவீதம் வரை பங்குகளைவைத்துள்ளனர்.
இதெல்லாம் மாறப்போகுது! ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கும் மாற்றங்கள் என்ன?
நடப்பு நிதியாண்டு பட்ஜெட் தாக்கலின்போது நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பில் முக்கியமாக, இரு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது, காப்பீடு நிறுவனத்தை விற்பதாகும். இதற்கு சட்டத்திருத்தம் தேவை என்று நிர்மலா தெரிவித்திருந்தார். ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கும் பணி நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.