எல்லைத்தாண்டி மீன்பிடித்தாக 15 தமிழக மீனவர்கள் கைது.... நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்!!

எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

15 tamilnadu fishermans who arrested by sri lanka navy had been released by sri lanka court

எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 15 பேர் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 15 பேரை கைது செய்ததோடு அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: வரும் சனிக்கிழமை அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்படும்… அறிவித்தது தமிழக அரசு!!

இதை அடுத்து கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேரும் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி நிரஞ்சனி முரளிதரன் தமிழக மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகு குறித்த வழக்கு நவ.25 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இதையும் படிங்க: வரலாற்று திரிபு நூல்கள் மூலம் சனாதன சக்திகள் தமிழகத்தில் ஊடுருவ முயற்சி..! ஆவேசமடைந்த வைகோ

இதை அடுத்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேர் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் விரைவில் தமிழகம் வந்தடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் ஒருவர் தாக்கப்பட்டதாகவும் அதில் கண்ணில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜான்சன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios