வரும் சனிக்கிழமை அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்படும்… அறிவித்தது தமிழக அரசு!!
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வரும் 19 ஆம் தேதி சனிக்கிழமை வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வரும் 19 ஆம் தேதி சனிக்கிழமை வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த அக்.24 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது தீபாவளிக்கு மறுநாளான அக.25 ஆம் தேதியும் விடுமுறை அளிக்க கோரி கோரிக்கைகள் எழுந்தன.
இதையும் படிங்க: வரலாற்று திரிபு நூல்கள் மூலம் சனாதன சக்திகள் தமிழகத்தில் ஊடுருவ முயற்சி..! ஆவேசமடைந்த வைகோ
அதன்பேரில் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு தீபாவளிக்கு மறுநாளான அக.25 ஆம் தேதியும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியிட்டது. மேலும் அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சனிகிழமை வேலைநாளாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: தமிழகத்தில் அனுமதியின்றி சிலைகள் வைக்க கூடாது... அதிரடி ஆக்ஷனில் இறங்கிய ஐகோர்ட் கிளை..!
அதன்படி வரும் 19 ஆம் தேதி அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் வரும் சனிக்கிழமை (நவம்பர் 19) அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்படும். தீபாவளிக்கு மறுநாள் விடப்பட்ட விடுமுறை காரணமாக, வரும் சனிக்கிழை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.