மிக்ஜாம் புயல் எதிரொலியாக 142 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் காரனமாக 142 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 3 முதல் டிசம்பர் 6 வரை சென்னை – கொல்கத்தா வழிதடத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை செண்ட்ரல், விஜயவாடா, திருப்பதி,விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் இருந்து செல்லும் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை நிஜாமுதீன், சென்னை – அகமதாபாத், மதுரை – சண்டிகர் உள்ளிட்ட முக்கிய ரயில்கள் ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட்தமிழ்செய்திகளைஉடனுக்குஉடன் Whatsapp Channel-லில்பெறுவதற்குகீழேகொடுக்கப்பட்டுஇருக்கும்லிங்குடன்இணைந்துஇருக்கவும்.

Click this link:https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

சென்னை செண்டரல் – கயா, சென்னை – விஜயவாடா, புது டெல்லி – புதுச்சேரி, ராமேஸ்வரம் – பனாராஸ் என பல்வேறு நகரங்களுக்க்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Scroll to load tweet…

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிஉள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வரும் 4-ம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொள்ளும் என்றும், 5-ம் தேதி நெல்லை - மசூலிப்பட்டணம் இடையே கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக வரும் 3,4 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியாகும் வரை யாரும் வெளியே வர வேண்டாம்.. சென்னை காவல்துறை எச்சரிக்கை..