தமிழக மீனவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை கடற்படை...! மீண்டும் 14 மீனவர்களை கைது செய்ததால் பதற்றம்
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை இன்று அதிகாலை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் மத்தியில் பற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

மீனவர்கள் கைது- இலங்கை கடற்படை அட்டூழியம்
மீனவர்கள் எல்லை தாண்டி மீன்படிப்பதாக கூறி அவ்வப்போது தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துவருகிறது. மீனவர்களின் சிறைப்பிடிப்பதையும் தாண்டி படகுகளையும் கொண்டு செல்வதால் மீனவர்கள் அச்சத்துடனே மீன் பிடித்து வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கையில் துறைமுகத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனால் மீனவர்களும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். எனவே இரு நாட்டு மீனவர்களும் இடையே பேச்சு வார்த்தை நடத்தி சுமூக ஏற்பாடு செய்ய மீனவர்கள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவ்வப்போது மீனவர்கள் கைது சம்பவம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்கள் மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் இருந்து விலகாத நிலையில், இன்று அதிகாலை ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
போட்டி போட்டு அதிகரிக்கும் தக்காளி, வெங்காயத்தின் விலை..! கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?