தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த தேர்வுக்கு சுமார் 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் 8.17 பேர் எழுதியுள்ளனர். இதனையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி நிறைவு பெற்றுள்ளது. இந்த பணி 79 மையங்களில், 60 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மீண்டும் அதிர்ச்சி.!! நீட் தேர்வுக்கு பயந்து புதுச்சேரி மாணவர் தற்கொலை
இந்த நிலையில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. இதுக்குறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 8 ஆம் தேதி (நாளை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும். மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தள முகவரியில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். அதில், மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: அரசு நூலக வேலைக்கு விண்ணப்பித்தவர்களா நீங்க... ஹால்டிக்கெட் வெளியானது - பதிவிறக்கம் செய்வது எப்படி?
மேலும், உறுதிமொழி படிவத்திற்கு குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் மூலமாகவும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயர் கல்வியில் சேருவது குறித்த சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள 14,417 என்ற உதவி எண்ணுக்கு மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும், காலை 8 மணி முதல் இரவு 8 வரை மாணவர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
