10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. பெரம்பலூர் முதலிடம்.. கடைசி இடத்தில் எந்த மாவட்டம்?
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட வாரியாக 97.67% பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதன்படி, இந்த பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு பொது தேர்வில் 94.66% மாணவிகளும், 88.16% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாணவர்களை விட மாணவிகள் 6.5% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதே போல் கடந்த ஆண்டு 90.7% மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் தமிழ் பாடத்தில் எந்த மாணவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுக்கவில்லை. இந்த தேர்வில் மாவட்ட வாரியாக 97.67% பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. அதே நேரம் 83.54% சதவீத தேர்ச்சியுடன் ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.
மாவட்ட வாரியான தேர்ச்சி விவரம் :
பெரம்பலூர் : 97.67%
சிவகங்கை : 97.53%
விருதுநகர் : 96.22%
கன்னியாகுமரி : 95.99%
தூத்துக்குடி : 95.58%
அரியலூர் : 95.40%
ஈரோடு : 94.53%
திருச்சி : 94.28%
திருநெல்வேலி : 94.19%
தென்காசி : 94.12%
திருப்பூர் : 93.93%
ராமநாதபுரம் : 93.86%
கோவை : 93.49%
திருப்பத்தூர் : 93.27%
நாமக்கல் : 92.98%
புதுக்கோட்டை : 92.31%
தஞ்சாவூர் : 92.16%
மதுரை : 91.79%
திண்டுக்கல் : 91.77%
கரூர் : 91.49%
வேலூர் : 91.34%
சேலம் : 91.13%
புதுச்சேரி : 91.05%
திருவாரூர் : 90.79%
விழுப்புரம் : 90.57%
காஞ்சிபுரம் : 90.28%
தேனி : 90.26%
தருமபுரி : 89.46%
கள்ளக்குறிச்சி : 89.34%
சென்னை : 89.14%
திருவண்ணாமலை : 88.95%
ஊட்டி : 88.82%
திருவள்ளூர் : 88.80%
கடலூர் : 88.49%
செங்கல்பட்டு : 88.27%
மயிலாடுதுறை : 86.31%
கிருஷ்ணகிரி : 85.36%
நாகை : 84.41%
ராணிப்பேட்டை : 83.54%