Asianet News TamilAsianet News Tamil

5 மாதங்களில் மட்டும் 28 தொழிலாளர்கள் பலி; பட்டாசு ஆலைகள் மீது கவனம் செலுத்துமா அரசு? உதயகுமார் கேள்வி

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் மட்டும் பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தால் 28 பேர் உயிரிழந்த நிலையில், அரசு இத்தொழில் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

tamil nadu government should take special care on firework employees said rb udhayakumar vel
Author
First Published May 11, 2024, 11:04 AM IST | Last Updated May 11, 2024, 11:04 AM IST

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் அறிக்கை வீடியோ வாயிலாக அறிக்கை ஒன்றை வெளியிட்டள்ளார். அந்த வீடியோவில், தமிழகத்தில் இன்றைக்கு பட்டாசு ஆலைகளால் ஏற்படுகிற விபத்துகளின் எண்ணிக்கை நமக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி நம்பிக்கை இழக்க செய்து இருக்கிறது. விதிமுறைகள் மீறினாலே ஏற்படும் இந்த தொடர் விபத்துகளில் 2024ம் ஆண்டில் கடந்த 5 மாதத்தில் 5 விபத்துகள் தொடர்ந்து நடைபெற்றுள்ளது.

ஜனவரியில் நடைபெற்ற விபத்தில் ஆறு பேர் பலியாகி உளளனர். மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். பிப்ரவரி மாதத்தில் 3 விபத்துக்கள் நடைபெற்றதில் 12 பேர் பலியாகி உள்ளனர் 6 பேர் காயமாய் உள்ளனர். மே மாதம் மூன்று விபத்துகள் நடைபெற்றதில. 10 பேர் பலியாகி உள்ளனர் 14 பேர் காயம் அடைந்துள்ளனர். இதுவரை 28 பேர் பலியாகி உள்ளதாக அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியே படுகாயம் அடைந்தவர்கள் பிழைத்தாலும் கூட அவர்களால் முழுமையாக செயல்பட முடியாமல் இருப்பதையும் நாம் கவலையோடு பார்க்கமுடிகிறது.

வங்கி மேலாளரை விடாது துரத்திய பரம்பரை வியாதி; பிறந்த நாளில் எடுத்த விபரீத முடிவு - அரக்கோணத்தில் பரபரப்பு

பொதுவாக விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, விருதுநகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலைகள் உள்ளன. இந்த பட்டாசு ஆலைகளில் எப்போதாவது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் இப்பொழுது தொடர்ந்து நடைபெறுகிறது. பட்டாசு ஆலையில் விதிமுறை மீறலை கண்டும் காணாமல் இருக்கிறது அரசு. இதனால் உயிர்பலி தொடர்கிறது. விதிமுறைகளை அரசு அறிவித்து வருகிறது. ஆனால் அதை கண்துடைப்பாக தான் இருக்கிறது.

தொழிலாளரகளுக்கு முறையான பயிற்சி இருக்கிறதா?  பாதுகாப்பு உபகரணங்கள் இருக்கிறதா? என்பதை தொடர் ஆய்வு மேற்கொள்வதற்கு  மாவட்ட நிர்வாகமும், அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இன்றைக்கு கண்டும் காணாமல் இருப்பதினால் உயிர்களை நாம் பலி கொடுத்திருக்கிறோம். இதுகுறித்து எடப்பாடியார் தொடர்ந்து பட்டாசு ஆலையில் விதி மீறல் உள்ளது ஆய்வு நடத்தி தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்துகிறார். 

தொழிலாளர்கள் குடும்ப வாழ்வாதாரத்திற்காக தங்கள் உயிரையே பணையம் வைத்து இந்த பட்டாசு ஆலைகளில் செயல்படுகிற போது, அதிக லாபம் நோக்கத்தோடு  அதிக உற்பத்தியை இலக்காக வைத்து ஆலைகள் செயல்படுகிறபோதுதான் விதிமுறை மீறல்கள் அங்கே நடைபெறுகிறது. பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் வைத்து முறையான விதிமுறைகளை கடைபிடித்து இந்த பணியை மேற்கொள்போது  பாதுகாப்பாக இருக்கலாம் என்பது எல்லோருக்கும் அறிந்த ஒன்று, ஆனால் விபத்து ஏற்பட்டு  நமக்கு கவலை இருக்கிற செய்தி இருக்கிறது. இந்த அரசு தொடர் ஆய்வுகளை மேற்கொள்ளாமல் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்?

ரத்தம் சொட்ட சொட்ட கொடூர தாக்குதல்.. திருவாரூர் மாவட்ட பாஜக தலைவரை தட்டித் தூக்கிய போலீஸ்.!

எத்தனை விதிமீறல் ஆலைகள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது அரசு தெரிவிக்கப்படவில்லை. எப்போதாவது நடப்பது என்பது நாம் அதை கடந்து செல்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளலாம் ஆனால் எப்போதுமே விபத்துகள் நடந்து கொண்டே இருந்தால் அது எப்படி கடந்து செல்வது. தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக, தங்கள் பிள்ளைகளுக்காக, மருத்துவ செலவுக்காக இந்த தொழிலில் ஈடுபடுகிறார்கள் அவர்கள் உயிரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

இறந்ததற்கு பின்பு நிவாரணம் கொடுத்தால் அந்த உயிரை நாம் மீண்டும் கொண்டு வர முடியுமா? என்பது நான் சிந்தித்து பார்க்க வேண்டும் .இழந்த உயிரை மீட்க முடியாது. அதிக உற்பத்திக்காக அங்கே 100 சகவீதம் விதிமீறல்கள் மீறி அவர்கள் உற்பத்தியில் ஈடுபடுகிற போது தான்  தொழிலாளர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத ஒரு நிலையை நாம் பார்க்க முடிகிறது. அரசு இன்னும் உறக்கத்திலே ஆழ்ந்த நித்திரையில் இருந்தால் இன்னும் எத்தனை உயிர்களை பறிபோகிறதோ என்கிற அச்சம், கவலை ஏற்பட்டிருக்கிறது .

விதிமுறைகளை கண்டறிய ஆய்வுகளை அரசு நடத்துமா? புதிய பாதுகாப்பை தொழிலாளர்களுக்கு வழங்க அரசு முயற்சி எடுக்குமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios