ரத்தம் சொட்ட சொட்ட கொடூர தாக்குதல்.. திருவாரூர் மாவட்ட பாஜக தலைவரை தட்டித் தூக்கிய போலீஸ்.!
மே மாதம் 8ம் தேதி இரவு தனது வீட்டில் இருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் மதுசூதனனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர்.
திருவாரூர் அருகே முன்னாள் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் மதுசூதனனை அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே காவனூர் பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன். இவர் முன்னாள் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளராக இருந்துள்ளார். அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். இந்நிலையில் மே மாதம் 8ம் தேதி இரவு தனது வீட்டில் இருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் மதுசூதனனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: சவுக்கு சங்கரை தொடர்ந்து ரெட் பிக்ஸ் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் வைத்து தூக்கிய போலீஸ்!
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மதுசூதனனின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பணத்தை பங்கு பிரிப்பதில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் மற்றும் மதுசூதனன் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் இதனால் மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் அரசனின் தூண்டுதலின் பேரில் மதுசூதனனை கூலிப்படையினர் வெட்டியது தெரியவந்தது.
இதையும் படிங்க: தமிழகத்தில் 7 நாட்களுக்கு போட்டு தாக்கப்போகும் கனமழை.. சென்னையின் நிலவரம் என்ன? வானிலை மையம் முக்கிய தகவல்!
இதையடுத்து பாஜக தலைவர் பாஸ்கர், பொதுச்செயலாளர் செந்தில் அரசன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட பாஜக மாவட்ட விளையாட்டு பிரிவு தலைவர் ஜெகதீசன் மற்றும் அவரது கூட்டாளி சரவணன் ஆகியோரை கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கரனையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பாஜக பொதுச் செயலாளர் செந்திலரசன் உள்ளிட்ட 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.