முட்டை மேல் அமர்ந்து யோகாவில் உலக சாதனை படைத்த விருதுநகர் சகோதரிகள்

விருதுநகரைச் சேர்ந்த சுகானா, வைரலட்சுமி என்ற சிறுமிகள் முட்டை மீது அமர்ந்து யோகாசனம் செய்து உலக சாதனை படைத்தனர்.

Sisters set a world record in yoga sitting on an egg in virudhunagar

விருதுநகர் மாவட்டம் சின்ன மூப்பன்பட்டியைச் சேர்ந்த சின்னவைரவன், ரோகினி தம்பதியரின் மகள்கள் சுகானா (4) மற்றும் வைரலட்சுமி(7). இவர்கள் விருதுநகரில் உள்ள நடுநிலை பள்ளியில் LKG மற்றும் 2ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் யோகாவில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததால் கடந்த ஒரு வருடமாக தனியார் யோகா மையத்தில் யோகா கற்று வந்துள்ளனர். பின்பு யோகாவில் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 6 மாதமாக இருவரும் முட்டைமேல் அமர்ந்து ஹனுமனாசனம் மற்றும் விபத்த பட்ஜிமோத்தாசனம்  பயிற்சி மேற்கொண்டனர்.

ராணிபேட்டையில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது

இந்த நிலையில் இன்று சாத்தூர் அருகிலுள்ள ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நோபல் உலக சாதனை முயற்சிக்கான யோகா போட்டியில் சிறுமி சுகானா 120 முட்டை மேல் அமர்ந்து அனுமனாசணம் தொடர்ந்து 30 நிமிடம் செய்து காண்பித்தார். அதனை தொடர்ந்து சிறுமி வைரலட்சுமி 30 முட்டை மேல் அமர்ந்து இருகைகளிலும் தண்ணீர் டம்ளரை பிடித்தவாறு விபத்த பட்ஜி மோத்தாசனா யோகாவை தொடர்ச்சியாக 30 நிமிடம் செய்து காண்பித்து உலக சாதனை படைத்து நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரிகளே இல்லை; திருமாவளவன் பெருமிதம்

இந்நிகழ்ச்சியில் நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் சி.இ.ஓ. அரவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இதற்கான சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியினை விக்டரி கிங் என்டர்டெயின்மென்ட் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios