Asianet News TamilAsianet News Tamil

கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரிகளே இல்லை; திருமாவளவன் பெருமிதம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரிகளே இல்லை என்ற நிலை இருப்பதாக சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

dmk alliance parties victory for erode east constituency is already expected says thirumavalavan
Author
First Published Jan 28, 2023, 5:15 PM IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தனியார் வேலை வாய்ப்பு முகாமை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் இதுவரை 71 தனியார் வேலை வாய்ப்பு முகாம் மூலம் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். தற்போது நடைபெற்று வரும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 130க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். 

ராணிபேட்டையில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியின் வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. அதிமுக கூட்டணியில், அதிமுகவில் குழப்பம் நீடித்து வருகிறது. பாஜக தேர்தலில் போட்டியிடுவதா? அதிமுகவிற்கு ஆதரவளிப்பதா? அல்லது தேர்தலை தவிர்ப்பதா என உறுதியாக தெரியாத நிலையில் உள்ளது. பாமக தேர்தலில் இருந்து விலகி உள்ளது. இதன் மூலம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்ற நிலையில் திமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாக உள்ளது. 

திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபடுவேன். இந்தியாவை வல்லரசாக்குகிறோம் என்று பாஜக கூறி வருகிறது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு பொருளாதார வீழ்ச்சி, பணத்தின் வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  நாட்டை வல்லரசாக்குவதற்கு பதிலாக மக்களிடையே ஜாதி மதத்தின் பெயரால் வெறுப்பை ஏற்படுத்தி மக்களுக்கு இடையே இடைவெளியை ஏற்படுத்துவதே பாஜகவின் முக்கிய கடமையாக செய்து வருகிறது. 

அமைச்சர்கள் பணம் கேட்டால் கொடுங்கள்; மேடையிலேயே கமிசன் குறித்து பேசிய டி.ஆர்.பாலு

தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட் எதிர்பார்க்கும் அளவிற்கு சிறப்பான பட்ஜெட்டாக இருக்க வாய்ப்பில்லை.  நாட்டில் பாஜகவால் முன்னெடுக்கப்பட்டு வரும் வெறுப்பு அரசியலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம். நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சனைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்துவோம் என்று தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios