Asianet News TamilAsianet News Tamil

ஆளுநர் அலட்சியத்தால் அநியாயமாக பறிபோகும் உயிர்கள்.. மேலும் ஒரு கல்லூரி மாணவர் தற்கொலை..!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன். இவருடைய மகன் வினோத் குமார்(21). இவர் மதுரை திருமங்கலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார்.

Online Gambling - College Student Suicide in virudhunagar
Author
First Published Dec 16, 2022, 9:21 AM IST

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் மனவேதனை அடைந்து பொறியியல் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன். இவருடைய மகன் வினோத் குமார்(21). இவர் மதுரை திருமங்கலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார். நேற்று இவர் உடல்நிலை சரியில்லை என்று நண்பர்களிடம் கூறிவிட்டு கல்லூரிக்கு செல்லாமல் விடுதியிலேயே இருந்துள்ளார். 

இதையும் படிங்க;- அடுத்தடுத்து உயிர் பலி கேட்கும் ஆன்லைன் ரம்மி.. 10 லட்சத்தை இழந்த ஐடி ஊழியர் தற்கொலை..!

Online Gambling - College Student Suicide in virudhunagar

இந்நிலையில், நண்பர்கள் அனைவரும் கல்லூரிக்கு சென்ற நிலையில் யாரும் இல்லாத நேரத்தில் வினோத்குமார் அறையை உள்புறமாக பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து, கல்லூரி சென்றுவிட்டு மாலை திரும்பிய நண்பர்கள் கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த சக மாணவர், கல்லூரி ஆசிரியரிடம் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து, விடுதி வார்டன், ஆசிரியர்கள் வந்து கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, மாணவர் வினோத்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

Online Gambling - College Student Suicide in virudhunagar

இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வினோத்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவன் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஆன்லைனில் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் மனவருத்தம் அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மசோதா நிறைவேற்றி 60 நாட்கள் நிறைவு பெற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காதததால் அடுத்தடுத்து தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க;-  சென்னையில் பயங்கரம்.. ஏசியில் மின் கசிவு.. தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த தொழிலதிபர்.!

Follow Us:
Download App:
  • android
  • ios