சென்னையில் பயங்கரம்.. ஏசியில் மின் கசிவு.. தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த தொழிலதிபர்.!
சென்னை சூளைமேடு இளங்கோவடிகள் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(52). இவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். நேற்று வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்ற நிலையில் அவர் மட்டும் விட்டு அறையில் ஏசியை ஆன் செய்து விட்டு தூங்கியுள்ளார்.
சென்னையில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அறையில் தூங்கி கொண்டிருந்த தொழிலதிபர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேடு இளங்கோவடிகள் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(52). இவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். நேற்று வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்ற நிலையில் அவர் மட்டும் விட்டு அறையில் ஏசியை ஆன் செய்து விட்டு தூங்கியுள்ளார். அப்போது, காலை 6 மணியளவில் அவரது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தப்போது சுரேஷ்குமார் தீயின் கருகிய நிலையில் சுரேஷ்குமார் சடலமாக கிடந்தார்.
இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என விசாரித்து வருகின்றனர்.