விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை ஒன்றில் நிகழ்ந்த வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில், ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 140 தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் இந்த ஆலையில் பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ரசாயன மூலப் பொருட்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கஞ்சா போதையில் லாரி ஓட்டுநர் வெட்டி படுகொலை; போலீசார் வலைவீச்சு

இந்த வெடி விபத்தில் திருத்தங்கல்லை சேர்ந்த ரவி என்ற பட்டாசு தொழிலாளி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சாமுவேல் ஜெயராஜ் என்ற தொழிலாளி படுகாயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் பட்டாசு தயாரிக்கும் ஒரு அறை முழுவதும் தரைமட்டமானது.

நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவுக்கு முக அழகிரி நேரில் அஞ்சலி

 விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டாசு ஆலைகளில் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வரும் நிலையில் விபத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.