விவசாயத்திற்கு ஆள் பற்றாக்குறை; நாற்று நடும் பணியில் களமிறங்கிய வடமாநில தொழிலாளர்கள்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆள் பற்றாக்குறை காரணமாக வடமாநிலத் தொழிலாளர்களைக் கொண்டு விவசாயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. தற்போது இரண்டாம் பருவ விவசாயத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் நாற்று நடும் பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் நாற்று கட்டுதல், சுமந்து வருதல், நடுவை என ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாக ஊதியம் வழங்க வேண்டிய நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
ஆள் பற்றாக்குறை காரணமாக விவசாய பணிகள் தாமதமாக நடப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் வட மாநிலத்தில் இருந்து ராஜபாளையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் மூலமாக தற்போது விவசாய பணிகளுக்கு வடமாநில தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மனைவியின் ஆபாச படங்களை வைத்து மிரட்டிய கணவர்; 5 ஆண்டு சிறை - நீதிமன்றம் அதிரடி
கொல்கத்தா உள்ளிட்ட வட மாநிலங்களில் போதிய வேலை வாய்ப்பு இல்லாததால் அவர்கள் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இந்நி்லையில் வடமாநிலங்களில் விவசாய பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 30 பேர் அழைத்துவரப் பட்டுள்ளனர்.
தூய்மை பணியாளரை சாதி பெயரை சொல்லி தற்கொலைக்கு தூண்டிய திமுக பிரமுகர் போலீசில் சரண்
30 பேர் இணைந்து நாற்றை கட்டி சுமந்து வந்து நடுகை செய்வார்கள். ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 5 ஆயிரத்து 700 ஊதியமாக கிடைக்கிறது. நாள் ஒன்றுக்கு எட்டு ஏக்கர் வரை நடுவை செய்து வருகின்றனர். இதனால் உள்ளூர் விவசாயிகளுக்கு வேலை விரைவாக நடப்பதுடன் அறுவடையும் தாமதம் இன்றி நடைபெறும் என கருத்து தெரிவிக்கின்றனர்.