தூய்மை பணியாளரை சாதி பெயரை சொல்லி தற்கொலைக்கு தூண்டிய திமுக பிரமுகர் போலீசில் சரண்

தூத்துக்குடி தூய்மை பணியாளர் சுடலைமாடன் தற்கொலைக்கு காரணமாக இருந்த திமுகவைச் சேர்ந்த முன்னாள் பேரூராட்சி தலைவி ஆயிஷா தலை மறைவாக இருந்த நிலையில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

DMK leader wanted in connection with cleanliness worker suicide surrenders at police station

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்த சுடலை மாடன்  என்பவரிடம் திமுகவைச் சேர்ந்த தற்போது பேரூராட்சி தலைவியாக இருக்கு ஹீமைரா என்பவரது மாமியாரும் திமுகவை சேர்ந்த முன்னாள் பேரூராட்சி தலைவியுமான ஆயிஷா லஞ்சமாக ரூ.3 லட்சம் கேட்டதுடன் அவரை ஜாதியை சொல்லி திட்டி பணி ரீதியாக மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதை தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளான சுடலைமாடன் கடந்த மாதம் 17ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தூய்மை பணியாளர் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 23ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த தம்பதி இடையே பிரச்சினை; தற்கொலைக்கு முயன்ற வாலிபர் படுகாயம்

இதை அடுத்து ஆயிஷா, ஹீமை ரா, ஆயிஷா வின் மகன் அசாப், செயல் அலுவலர் பாபு உள்ளிட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்தால் ஆயிஷா திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக ஆயிஷாவை அழைத்து வந்த திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

திருமணமாகாத சிறுமி பிரசவத்திற்கு பின் உயிரிழப்பு; உயிருடன் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

அங்கே அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் படுத்துக் கொண்டார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios