ஆப்ரிக்கன் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட 63 பன்றிகள் விஷ ஊசி போட்டு அழிப்பு
விருதுநகர் அருகே ஆப்பிரிக்கன் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட 63 பன்றிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் விஷ ஊசி போட்டு அழித்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு பன்றிகள் தன்னிச்சையாக உயிரிழந்து வைப்பாற்றுக்குள் கிடந்தன. இந்த பன்றிகளின் திடீர் உயிரிழப்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கால்நடைதுறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறையினர் உயிரிழந்த பன்றிகளின் உடலை மீட்டு ஆய்வு செய்தனர். அந்த பன்றிகளின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு அதன் முடிவுகள் வந்த நிலையில் உயிரிழந்த பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சாத்தூர் நகராட்சி, கால்நடை துறையினர், சுகாதாரத் துறையினர் தீவிர ஆய்வு செய்து விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பன்றி வளர்ப்பவர்கள் மற்றும் அங்குள்ள பன்றிகள் குறித்து ஆய்வு செய்தனர். அதன் முடிவில் சாத்தூர் அமீர் பாளையம் பகுதியில் வளர்க்கப்பட்டு வந்த 63 பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் வைரஸ் தொற்று இருந்தது தெரியவந்தது.
ஓடும் பேருந்தில் பெண் வெட்டிக்கொலை - பயணிகள் அலறியடித்து ஓட்டம்
இதைத்தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் நோய் தொற்று கண்டறியப்பட்ட 63 பன்றிகளை விஷ ஊசி போட்டு அழித்தனர். மேலும் வேறு பகுதிகளுக்கு வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.