Asianet News TamilAsianet News Tamil

ஓடும் பேருந்தில் பெண் வெட்டிக்கொலை - பயணிகள் அலறியடித்து ஓட்டம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறு காரணமாக ஓடும் பேருந்தில் பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

land issue lady killed in running bus in dindigul district
Author
First Published Apr 7, 2023, 2:02 PM IST | Last Updated Apr 7, 2023, 2:36 PM IST

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகிலுள்ள கணவாய்ப்பட்டி பங்களா பகுதியைச் சேர்ந்தவர் கோபி. திண்டுக்கல்லில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேனி(வயது 42). தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கோபிக்கும், அதே பகுதியில் வசித்து வரும் அவரது அண்ணன் ராஜாங்கத்துக்கும் இடையே 2 ஏக்கர் பூர்வீக சொத்தை பாகப் பிரிவினை செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. சொத்துப் பிரச்சினை தொடர்பாக திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வழக்கறிஞரை சந்திப்பதற்காக கிருஷ்ணவேனி திண்டுக்கல்லுக்கு வியாழக்கிழமை புறப்பட்டுள்ளார். உலுப்பக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்த தனியார் பேருந்தில் கிருஷ்ணவேனி ஏறுவதை பார்த்து, அதே பேருந்தில் ராஜாங்கமும் தனது 14 வயது மகனுடன் ஏறியுள்ளார். பேருந்து கோபால்பட்டி அடுத்துள்ள வடுக்கப்பட்டி அருகே வந்தபோது, ராஜாங்கம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கிருஷ்ணவேனியை குத்தியுள்ளார். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். 

பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவி லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலி

உடனடியாக பேருந்தின் ஓட்டுநர் விஜய் பேருந்தை நிறுத்தினார். இதனிடையே ராஜாங்கம், மகனை விட்டுவிட்டு பேருந்திலிருந்து இறங்கி தப்பி ஓடினார். பலத்த காயமடைந்த கிருஷ்ணவேனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருஷ்ணவேனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தந்தையின் இறுதிச்சடங்கை விட பொதுத்தேர்வு முக்கியம் - மாணவியின் செயலால் நெகிழ்ந்த உறவினர்கள்

கிருஷ்ணவேனியின் 2 மகன்களில் ஒருவர் நிகழாண்டு 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். 2ஆவது மகன் வியாழக்கிழமை தொடங்கிய 10ம் வகுப்புத் தேர்வில் தமிழ் பாடத் தேர்வை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios