ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்ட விழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 

district collector declared local holiday for srivilliputhur andal temple car festival in virudhunagar district

வைணவ திருத்தளங்களில் முதன்மையான திருத்தளமாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவில் உலகப் புகழ்பெற்றது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்தும் இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். ஆழ்வார்களில் முதன்மையானவர்களாகிய ஆண்டாள் மற்றும் பெரியாழ்வார் அவதரித்த தலம் என்பதால் இக்கோவில் பெரும் சிறப்பு கொண்டது.

ஆண்டாள் அவதார நாளான ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் மிக முக்கியமான திருவிழாவாக இது கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவுக்கான கொடியேற்றம் கடந்த 14ம் தேதி தொடங்கியது.

திமுக அரசு எந்த நேரத்திலும் டிஸ்மிஸ் செய்யப்படலாம் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி காட்டம்

ஆடிப்பூர விழாவில் மிக முக்கியமான நிகழ்வான தேரோட்டத் திருவிழா நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. நாளை அதிகாலை ஆண்டாள் ரெங்மன்னார் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து கீழ ரத வீதிக்கு ஆண்டாள் ரெங்கமன்னார் கொண்டுவரப்பட்டு தேரில் எழுந்தருளச் செய்வர். காலை 8.05 தேரோட்டம் தொடங்குகிறது. 

நிர்வாகத்திடமே புகார் அளிக்க ஏற்பாடு; நோயாளி உயிரிழந்த நிலையில் கோவை மருத்துவமனை டீன் விளக்கம்..!

தேர் திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios