திமுக அரசு எந்த நேரத்திலும் டிஸ்மிஸ் செய்யப்படலாம் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி காட்டம்
திமுக ஆட்சி எந்த நேரத்திலும் டிஸ்மிஸ் செய்யப்படலாம், நாடாளுமன்ற தேர்தல் சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து நடப்பதற்கான சூழ்நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, அனைத்து துறைகளிலும் லஞ்சம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு முதலியவற்றை கட்டுப்படுத்த தவறிய பொம்மை முதலமைச்சர் மு க ஸ்டாலினை கண்டித்து திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றுபட்ட மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி லந்து கொண்டு பேசுகையில், விடியா திமுக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், பொம்மை முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும், மூத்த நிர்வாகிகள் மீதும், முன்னாள் அமைச்சர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை செயல்படாமல் முடக்குவதிலேயே கவனம் செலுத்துவதாகவும், தமிழக மக்கள் மீது எந்த நலனும், அக்கறையும் இல்லை என்று குற்றம் சாட்டினார்.
நிர்வாகத்திடமே புகார் அளிக்க ஏற்பாடு; நோயாளி உயிரிழந்த நிலையில் கோவை மருத்துவமனை டீன் விளக்கம்..!
மேலும் அனைத்து துறைகளிலும் ஊழல் லஞ்சம் தலை விரித்து ஆடுவதாகவும், விரைவில் இந்த ஆட்சி மத்திய அரசால் டிஸ்மிஸ் செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடப்பதற்கான சூழல் தமிழகத்தில் உருவாகியுள்ளது. அண்ணன் எடப்பாடியார் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்பார் என்றும் தெரிவித்தார்.