போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதாகக் கூறி திமுக அரசுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் விருதுநகரின் அதிமுகவினர் மனிதசங்கிலி போராட்டம்.

தமிழகம் முழுவதும் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதை கண்டித்து எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி இன்று விருதுநகரில் அதிமுக மேற்கு மாவட்டம் சார்பில் மேற்கு மாவட்ட கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் பால் வளத்துறை அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி. தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

முதல்வர் குடும்பத்தோடு நெருக்கம்! போதைப்பொருளை விற்ற பணத்தை திமுக நிர்வாகிகளுக்கு கொடுத்த ஜாபர் சாதிக்! இபிஎஸ்

இந்த மனித சங்கிலி போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய ஸ்டாலின் அரசே பதவி விலகு, எனக்கூறி அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் ஊழல் செய்யும் ஸ்டாலின் குடும்ப ஆட்சி தேவையில்லை, மாஃபியாவோடு தொடர்பில் உள்ள ஆளும் திமுக வை கண்டிக்கின்றோம். விடியா திமுகவே மாணவர்களின் வாழ்க்கையை அழிக்காதே உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் சிஏஏ அமல்படுத்தப்படாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!

இந்த பேரணியானது விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தொடங்கி, மூளிப்பட்ட அரண்மனை சந்திப்பு, பாவாலி ரோடு, கல்பள்ளி வாசல் வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் கை கோர்த்து நின்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.