Asianet News TamilAsianet News Tamil

Breaking: பச்சிளம் குழந்தையையும் விட்டு வைக்காத சோகம்; சிவகாசியில் ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பச்சிளம் குழந்தை உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

5 persons in a single family commits suicide in virudhunagar district
Author
First Published May 23, 2024, 3:13 PM IST

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கள் பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கம். இவர் தேவதானத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பழனியம்மாள். இவர் சுக்கிவார்பட்டி பகுதியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் லிங்கம் மற்றும் அவரது மனைவி உள்பட யாரும் வீட்டை விட்டு நீண்ட நேரம் வெளியே வராத காரணத்தினால் அருகில் இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்ததில் லிங்கம் மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் மற்றும் குழந்தைகள் ஆனந்தவள்ளி, ஆதித்யா, சசிகா(2 மாத குழந்தை) ஆகிய ஐந்து பேரும் இறந்த நிலையில் கிடந்ததுள்ளனர். 

திருமணமான ஒரே மாத்தில் ஜூட் விட்ட காதல் மனைவி? ஒரே நாளில் எதிர் வீட்டு இளைஞரும் மாயமானதால் போலீஸ் சந்தேகம்

இதனைத் தொடர்ந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த 5 பேரின் உடல்களையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஐந்து பேர் தற்கொலை காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில், கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட நபர்களிடம் ஆசிரியர் தம்பதி லட்சக்கணக்கில் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் கடன் கொடுத்தவர்கள் மீண்டும் கடனை கட்ட சொல்லி அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். இதனிடையே தனது தந்தையிடம் தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். 

எங்கள காப்பாத்துங்க ஐயா . . . காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த கிராம மக்களை உயிரை பயணம் வைத்து மீட்ட வீரர்கள்

அவரது தந்தை சொத்துக்களை பிரித்து கொடுப்பதற்கு தொடர்ச்சியாக மறுத்துள்ளார். இந்த நிலையில் தனது மகள், மகன் மற்றும் பேத்தியை கொலை செய்து விட்டு ஆசிரியர் தம்பதி இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனவும் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios