எங்கள காப்பாத்துங்க ஐயா! காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த கிராம மக்களை உயிரை பயணம் வைத்து மீட்ட வீரர்கள்
காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய மலை கிராம மக்களை பெரியகுளம் தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் இரவு வரை கனமழை பெய்தது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வெள்ளகெவி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னூர் காலனியைச் சேர்ந்த கிராம மக்கள் பெரியகுளத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்றுவிட்டு சின்னூர் மலை கிராமத்திற்கு 10 பேர் சென்றுள்ளனர். அப்பொழுது கல்லாற்றைக் கடக்கும் பொழுது திடீரென்று காட்டாற்று வெள்ளம் ஏற்படவே 4 நபர்கள் மறுகரையில் தப்பிச்சென்ற நிலையில் நான்கு நபர்கள் ஆற்றின் நடுவே உள்ள பாறை மீது ஏறி நின்று தப்பித்துள்ளனர்.
Redpix ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கியது திருச்சி நீதிமன்றம்
இந்த நிலையில் மறு கரைக்கு சென்ற மலை கிராம மக்கள் பெரியகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் தீயணைப்புத் துறையினர் உடனடியாக விரைந்து செயல்பட்டு ஆற்றின் நடுவே சிக்கித் தவித்த பிச்சை, நாகராஜ், கணேசன், சுரேஷ் ஆகிய நான்கு நபர்களையும் கயிறு கட்டி, பாதுகாப்பு உபகரணங்களை அணிவித்து 2 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.
மேலும் காற்றாட்டு வெள்ளத்தில் சிக்கிய மலை கிராம மக்கள் கூறுகையில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லாறு பகுதியில் பாலம் கட்டி தர பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இதுபோன்று மழைக்காலங்களில் ஆண்டுதோறும் உயிரை பணயம் வைத்து செல்லும் பொழுது இது போன்ற நிகழ்வில் சிக்கிக் கொள்வதாகவும், பல உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், வேதனையோடு தெரிவித்தனர். மேலும் தேனி, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டு மலை கிராம மக்களுக்கு பாலம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.