Asianet News TamilAsianet News Tamil

குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான தடை எப்போது நீங்கும்? வியாபாரிகளிடம் மாவட்ட நிர்வாகம் திட்டவட்டம்

குற்றாலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கு தடை தொடர்வதால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திடம் வியாபாரிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். 

Traders have demanded that the Courtallam travelers should be given permission as the water supply in Courtallam is steady vel
Author
First Published May 23, 2024, 9:56 AM IST | Last Updated May 23, 2024, 9:56 AM IST

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தில் வியாபாரிகள் சங்க தலைவர் காவையா தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்கள், வியாபாரிகள் மற்றும் விடுதி உரிமையாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோரை அலுவலகத்தில்  சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, குற்றாலத்தில் சாரல் சீசன் காலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து அருவிகளில் வெள்ளம் அதிகமாக வரும்போது பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க காவல்துறை மூலம் தடை விதிக்கப்படும். பின்னர் வெள்ளம் குறைந்தர்தும் மீண்டும் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். 

சமீபத்தில் வானிலை ஆய்வு மையம் தென்காசி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை வித்திருந்தது. பின்னர் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில் குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்த போதிலும் குளிக்க அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் கடந்த 6 நாட்களாக அறிவித்துள்ளது. இதனால் அருவியில் குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

உலகுக்கே நாகரிகத்தை கற்று கொடுத்த எங்களை திருடர்கள் போல சித்தரிப்பதா? மோடிக்கு எதிராக சீமான் காட்டம்

மேலும் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகையை நம்பி கடை நடத்தும் குத்தகைதாரர்கள், விடுதி உரிமையாளர்களின் வாழ்வாராதம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதேபோல் சுற்றுலாப்பயணிகள் வருகையை நம்பி உள்ள 200-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

அதேபோல கடந்த காலங்களில் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்ட போது 100 மீட்டர் தொலைவில் தடுப்புகள் அமைத்து, அருவியை பார்க்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இப்போது அருவிக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் வாகனங்களை நிறுத்தி, சுற்றுலாப் பயணிகளை திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகளை நம்பி தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே முன்பு இருந்த நடைமுறைகளை பின்பற்ற ஆவணம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். 

காதலனுக்கு தீ வைத்துவிட்டு தனக்கும் தீ வைத்த பெண் சிகிச்சை பலனின்றி பலி

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது, தமிழகத்தில் தொடர்ந்து பல மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. அதேபோல தென்காசி மாவட்டத்திற்கும் அதிக கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மழையின் அளவு குறைந்த பின்னர் அருகில் குளிப்பதற்கு இன்னும் ஓரிரு நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios