Asianet News TamilAsianet News Tamil

மயிலாடுதுறையில் காதலனுக்கு தீ வைத்துவிட்டு தனக்கும் தீ வைத்த பெண் சிகிச்சை பலனின்றி பலி

மயிலாடதுறையில் காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் காதலன் மீதும், தன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்ட இளம் பெண் சிகிச்ச பலனின்றி உயிரிழந்தார்.

A young woman who set herself on fire along with her boyfriend in Mayiladuthurai died without treatment vel
Author
First Published May 22, 2024, 7:43 PM IST

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ் (வயது 24). இவர் பூம்புகார் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடலூர் மாவட்டம் புவனகிரி கச்ச பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த நாகப்பன் மகள் சிந்துஜா மயிலாடுதுறை அரசு  மகளிர் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு பொருளாதாரம் பயின்று வந்தார். 

இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆகாஷ் வேறு ஒரு பெண்ணிடம் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவரிடம் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி ஆகாஷ், சிந்துஜா ஆகிய இருவரும் பூம்புகார் கடற்கரைக்கு சென்றுவிட்டு மயிலாடுதுறைக்கு பல்சர் இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்துள்ளனர். 

ஒட்டுமொத்த தமிழர்களிடமும் பிரதமர் மோடி வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் - சீமான் காட்டம்

அப்போது ஆகாஷ் பழகி வரும் பெண்ணிடம் எந்த தொடர்பும் வைத்துகொள்ளகூடாது என்று சிந்துஜா கூறியதற்கு ஆகாஷ் மறுப்பு தொவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிந்துஜா மயிலாடுதுறை பாலக்கரை அருகே வந்தபோது தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போதே ஆகாஷ் மீதும், தன் மீதும் ஊற்றி தீவைத்துக் கொண்டுள்ளார். 

இஸ்லாமியர்களின் பிறை கொடியை ஏற்றி கோவில் திருவிழாவை தொடங்கிய பொதுமக்கள்; மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்

இதில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக அரசு மருத்துவமனைக்க அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி ஆகாஷ் கடந்த 14ம் தேதி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த சிந்துஜாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios