Savukku Shankar Case: Redpix ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கியது திருச்சி நீதிமன்றம்
யூடியூபர் சவுக்கு சங்கரின பெண் காவலர்கள் தொடர்பான சர்ச்சை நேர்காணலை ஒளிபரப்பு செய்த ரெட் பிக்ஸ் தளத்தின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து தரக்குறைவான வகையில் விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து அவர் தேனியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது தமிழக காவல் துறைய குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் சவுக்கு சங்கரின் நேர்காணலை எடிட் செய்யாமல் அப்படியே வெளியிட்ட ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டும் டெல்லியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டுக்கு திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா இம்மாதம் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார். இதனையடுத்து அவரை திருச்சி மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்து வைத்தனர். இந்நிலையில் கடந்த 20ம் தேதி காவல்துறையின் கஸ்டடிக்கு ஒரு நாள் நீதிபதி உத்தரவை அடுத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
உலகுக்கே நாகரிகத்தை கற்று கொடுத்த எங்களை திருடர்கள் போல சித்தரிப்பதா? மோடிக்கு எதிராக சீமான் காட்டம்
இதனைத் தொடர்ந்து பெலிக்ஸ் ஜெரால்டு தரப்பு வழக்கறிஞர்கள் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி திருச்சி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அடுத்து வரும் 6 மாதத்திற்கு திருச்சி கணினி சார் குற்றவியல் பிரிவில் மாதத்திற்கு 2 முறை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பெலிக்ஸ் ஜெரால்டு இன்று சிறையில் இருந்து வெளிவர வாய்ப்பு உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.