விருதுநகர் மாவட்டத்தில் அடுத்தடுத்து மூன்று இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில் 2 வயது குழந்தை உட்பட மொத்தம் ஐந்து பேர் காயமடைந்தனர். 

விருதுநகர் சிவகாசி சாலையில் குமாரலிங்கபுரம் அருகே வெள்ளூரைச் சேர்ந்த பாலமுருகன் தனது இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது பலமாக மோதினார். மோதிய வேகத்தில் சாலையில் வந்து கொண்டிருந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மீதும் மோதி உள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த விபத்தில் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த மணிகண்டன் மற்றும் அவரது மனைவி பாக்கியம் மற்றும் அவர்களின் இரண்டு வயது குழந்தை கவின் தீனா மற்றும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த நென்மேனியைச் சேர்ந்த தங்கபாண்டியன் உட்பட ஐந்து பேரும் படுகாயம் அடைந்தனர்.‌

தொட்டியத்தில் மூதாட்டியை கட்டிப்போட்டு கொடூர கொலை; காவல்துறை விசாரணை

உடனடியாக விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் மூன்று இரு சக்கர வாகனங்களும் பலத்த சேதமடைந்தன.‌ இந்த விபத்து குறித்து ஆமத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.