விவசாய வேலைக்கு வேனில் சென்ற பெண்கள்..! கார் மோதி பரிதாப பலி..!
பாலையம்பட்டி அருகே இருக்கும் ரெயில்வே மேம்பாலம் அருகே வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் கார் ஒன்று பின்னால் வந்துள்ளது. அதிவேகத்தில் வந்த கார் எதிர்பாராத விதமாக வேன் மீது பயங்கரமாக மோதியது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே இருக்கிறது தண்டியனேந்தல் கிராமம். இக்கிராமத்தில் இருக்கும் மக்கள் விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அருகே இருக்கும் கிராமங்களுக்கு சென்று விவசாய பணிகள் செய்வது வழக்கம். அவ்வாறு செல்லும் போது தொழிலாளர்கள் அனைவரும் ஒரு சரக்கு வேனில் சென்று வந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று காலையில் வழக்கம்போல பக்கத்து கிராமமான பந்தல்குடிக்கு வேலைக்கு கிளம்பியுள்ளனர். அதற்காக ஒரு சரக்கு வேனில் 18 பெண்கள் உள்பட 23 பேர் பயணம் செய்தனர். வாகனத்தை தண்டியனேந்தலைச் சேர்ந்த தங்கையா(35) என்கிற ஓட்டுநர் ஓட்டியுள்ளார்.
பாலையம்பட்டி அருகே இருக்கும் ரெயில்வே மேம்பாலம் அருகே வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் கார் ஒன்று பின்னால் வந்துள்ளது. அதிவேகத்தில் வந்த கார் எதிர்பாராத விதமாக வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் சரக்கு வேன் சாலையின் மறுபுறம் பாய்ந்து கவிழ்ந்து, அதில் பயணம் செய்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். பலத்தகாயமடைந்த தொழிலாளர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
'பெண்ணுரிமை பேசும் திரௌபதி'..! இரண்டு முறை பார்த்து உள்ளம் குளிர்ந்த ராமதாஸ்..!
தகவலறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் படுகாயமடைந்து மாரி (55), பழனியம்மாள் (28), விஜயலட்சுமி (32) ஆகிய 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவர்களது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காயமடைந்த 11 பேர் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் கார் டிரைவர் பூவலிங்கம் (33) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.