வண்ணாரப்பேட்டை படத்தை தொடர்ந்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் திரௌபதி. இதில், நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி அண்ணன் ரிச்சர்ட் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் அண்மையில் வெளியாகி செம வைரலானது. படம் வெளியான நாள் முதல் திரையரங்குகளில் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. இந்த படம் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். படத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது.

இந்தநிலையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இரண்டாம் முறையாக திரௌபதி திரைப்படத்தை பார்த்துள்ளார். நேற்று மாலையில் சென்னை சத்யம் திரையரங்கில் பாமக நிர்வாகிகளோடு சென்று ராமதாஸ் படம் பார்த்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில், 'பெண்ணுரிமை பேசும் திரௌபதி திரைப்படத்தை இரண்டாவது முறையாக நேற்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் பா.ம.க. நிர்வாகிகள் இசக்கி படையாட்சி, செல்வகுமார், வண்ணை இராதாகிருஷ்ணன், எனது பெயரன் முகுந்தன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினருடன் பார்த்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இதற்கு முன்பாக சென்னை அடையாறில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழக வளாகத்தில் திரௌபதி திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது குடும்பத்துடன் பார்வையிட்டார். பார்த்தது மட்டும் அல்லாமல் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என ராமதாஸ் தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்ணனும் தம்பியும் அதிகாரத்திற்கு வந்து இனவெறி ஆட்டம் போடுறாங்க..! கொந்தளிக்கும் வைகோ..!