விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கிறது சின்னகாமன்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பிரபாகரன். பாட்டாசு வியாபாரம் பார்த்து வரும் பிரபாகரன் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை ஒன்று வைத்துள்ளார். இங்கு அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான கூலித்தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  இன்று காலையில் பட்டாசு தொழிற்சாலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர்.

பட்டாசு தயாரிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது  ஒரு வாகனத்தில் தொழிலாளர்கள் பட்டாசுகளை ஏற்றிக்கொண்டிருந்தனர். அந்தநேரத்தில் உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து வெளியேறிய தீ தொழிற்சாலையில் பற்றி எரிய தொடங்கியுள்ளது. சில வினாடிகளில் பட்டாசு தொழிற்சாலையில் இருக்கும் அனைத்து அறைகளிலும் மளமளவென தீ பரவ பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த விபத்தில் தொழிற்சாலையில் இருக்கும் ஒரு அறையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறி அந்த அறை முற்றிலுமாக தரைமட்டமானது.

'தயவு செய்து கோவில் கொடைவிழாக்களில் தொந்தரவு செய்யாதீங்க'..! காவல்துறைக்கு எதிராக கொந்தளிக்கும் வைகோ..!

வெடிவிபத்தில் பட்டாசு தொழிற்சாலையில் பணியில் இருந்த வள்ளியம்மாள்(65), விஜயகுமார்(42) உட்பட 3 பேர் பலத்தகாயமடைந்து பலியாகினர். 7 பேர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த சாத்தூர் வெம்பக்கோட்டை தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணி மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் அழைத்துச்சென்றனர். பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. வெடிவிபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் சிவகாசி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.