Asianet News TamilAsianet News Tamil

சாத்தூர் அருகே காய்ச்சல் பாதிப்பால் பள்ளி மாணவன் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே 10ம் வகுப்பு மாணவன் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

10th standard student died in fever i virudhunagar district
Author
First Published Apr 1, 2023, 3:58 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சங்கரநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் பாலமுருகன் (வயது 15). இவர் சாத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் பாலமுருகனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பால் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள. இதை அடுத்து அவரது குடும்பத்தினர் பாலமுருகனை சாத்தூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து மேல்சிக்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவன் பாலமுருகன் பரிதாபமாக உயிரிழந்தார். 

காய்ச்சல் பாதிப்பால் பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சாத்தூர் அருகே உள்ள சங்கரநத்தம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் உள்ளதாகவும், கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரப்படவில்லை, முறையாக குப்பைகள், கழிவுகள் அப்புறப்படுத்துவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தால் 2 லாரிகள் மோதி விபத்து; சிறுவன் பலி

அதேபோல் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் இப்பகுதியில் தேங்கும் கழிவு நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், தொடர்ந்து இப்பகுதி மக்களுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்தவும், நோய்த்தொற்று பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை காக்கவும் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்த திருவாரூர் தேர்; பொதுமக்கள் பரவசம்

Follow Us:
Download App:
  • android
  • ios