ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே இருக்கிறது செய்யூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகன் உதயகுமார்(15). பத்பநாபன் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். உதயகுமார் அரக்கோணத்தில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்ற உதயகுமார் வகுப்பறையில் சக மாணவர்களுடன் படித்து கொண்டிருந்தார். 

மதியம் வகுப்பில் இருந்த ஆசிரியரிடம் உதயகுமார் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த ஆசிரியர்களும் மாணவர்களும் உடனடியாக  அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு உதயகுமாரை கொண்டு சென்றனர். அங்கு மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதை கண்டறிந்தனர். அதை ஆசிரியர்களிடம் தெரிவிக்கவே, அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக காவல்துறைக்கும் மாணவனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

'பெண்ணுரிமை பேசும் திரௌபதி'..! இரண்டு முறை பார்த்து உள்ளம் குளிர்ந்த ராமதாஸ்..!

மருத்துவமனைக்கு வந்த பெற்றோர், தங்கள் மகன் பிணமாக கிடப்பது கண்டு கதறி துடித்தனர். பின் காவல்துறையினர் மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவனின் உயிரிழந்தது தொடர்பாக அரக்கோணம் தாசில்தார் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.