சுந்தரவிநாயகர் கோவிலில் பலகோடி ரூபாய் ஊழல்; கோவில் முன்பாக முன்னாள் நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுந்தரவிநாயகர் கோவிலில் தற்போது பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் பலகோடி ரூபாய் அளவில் ஊழல் செய்திருப்பதாக குற்றம் சாட்டி முன்னாள் நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை நகராட்சிக்கு உட்பட்ட அணைக்கட்டு ரோடு கோனேரி செட்டி தெருவில் ஸ்ரீ சுந்தரவிநாயகர் திருக்கோவில் கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேல் இருந்து வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தக் கோயில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பல முறை , பழைய நிர்வாகிகள் சமுக ஆர்வலர்கள் புகார் மனுக்களை அளித்தனர் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
கோவில் கட்டுப்பாட்டில் சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் திருமண மண்டபம்கள், வீடுகள், நிலங்கள் என அசையா சொத்துக்கள் பல கோடிக்கணக்கில் உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 20 வருடங்களாக பரமசிவன் என்பவர் தலைவராக செயல்பட்டு வந்தார். அவரை நீக்கி கடந்த 6 வருடங்களாக தலைவராக கோபி மற்றும் அறம் அறங்காவலர்கள் குழு தலைமையில் நடந்து கொண்டிருக்கிறது. முன்னாள் கும்பாபிஷேக குழு தலைவராகவும், தற்பொழுது ரத விழா கமிட்டி தலைவராகவும் வேலு, சதாசிவம் ஆகிய மூவர் கூட்டணியில் நிர்வாக சீர்கேடுகள் (பல கோடி ரூபாய் பணம் ஊழல்)சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
திருவாரூரில் கொலை வழக்கில் ஆஜரான நபரின் தலையை சிதைத்து கொடூர கொலை; மர்ம கும்பல் வெறிச்செயல்
வேலு மற்றும் பொருளாளர் சதாசிவம் இணைந்து பல கோடி ரூபாய் ஊழல் செய்ததை கண்டுபிடித்த முன்னாள் தலைவர் பரமசிவம் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கோவில் முன்பாக திரண்டு கோவில் நிர்வாகிகளிடம் கேள்வி கேட்டனர். அவர்கள் சரியான பதில் சொல்லாத காரணத்தினால் கோவிலுக்கு முன்பாக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
முன்னாள் கோவில் நிர்வாகிகள் பேசும் போது கோவிலுக்கு சொந்தமான கடைகளை மற்றும் கோவில் சொத்துக்களை தற்போது உள்ள நிர்வாகிகள் வேலு, பொருளாளர் சதாசிவம் இணைந்து பல கோடி ரூபாய்க்கு விற்று உள்ளதாகவும், மேலும் கோவில் உறுப்பினர்களான 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை புறக்கணித்து தன்னிச்சையாக செயல்படுவதாகவும் கூறுகின்றனர்.
புதுவை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல்
பல கோடி ரூபாய் ஊழல் நடந்த இந்த கோவில் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறை இயக்குனர் மற்றும் அமைச்சர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து தவறு செய்யும் நிர்வாகிகளை நீக்கி 100 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த கோவிலை புனிதமாக நிர்வகிக்க வேண்டும் என பழைய நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.