Asianet News TamilAsianet News Tamil

கந்து வட்டி டார்ச்சரால் 3 குழந்தைகளை தவிக்கவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை..! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்..!

 மன உளைச்சலில் இருந்த தினேஷின் மனைவி மோனிஷா வீட்டில் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Mother commits suicide after leaving 3 children in vellore tvk
Author
First Published Nov 24, 2023, 12:55 PM IST | Last Updated Nov 24, 2023, 12:58 PM IST

குடியாத்தம் அருகே மூன்று குழந்தைகளின் தாய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சாமியார் மலை பகுதியைச் சேர்ந்தவர்  தினேஷ்.  மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மோனிஷா. இவர்களுக்கு 6 வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் ஒரு பெண் குழந்தை இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.

இதையும் படிங்க;- ஜிம்மில் உடற்பயிற்சி செய்த போது திடீர் மாரடைப்பு! சென்னையில் இளம் பெண் மருத்துவர் பலி!இவர் யார் மகள் தெரியுமா?

அதே பகுதியைச் சேர்ந்த மாலதி என்பவரிடம் சுமார் 10 மாதங்களுக்கு முன் 30 ஆயிரம் ரூபாய் 15 நாட்களுக்கு பத்து ரூபாய் வட்டி என்று வாங்கியுள்ளனர். முப்பதாயிரம் ரூபாய் கடனுக்கு மொத்தம் 70 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அதில் 30,000 செலுத்திய பிறகு பாக்கி 40 ஆயிரம் ரூபாய் தர சொல்லி அவதூறாக பேசி மிரட்டி உள்ளார்.

இதையும் படிங்க;-  ஏரி குளம் எல்லாம் ரொம்பி போய் இருக்கு.. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. தேனி மாவட்ட ஆட்சியர்..!

இதனால் மன உளைச்சலில் இருந்த தினேஷின் மனைவி மோனிஷா வீட்டில் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மோனிஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதனிடையே, மாலதியை கைது செய்ய கோரி தினேஷின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios