ஜிம்மில் உடற்பயிற்சி செய்த போது திடீர் மாரடைப்பு! சென்னையில் இளம் பெண் மருத்துவர் பலி!இவர் யார் மகள் தெரியுமா?
உடல் எடையை குறைப்பதற்காக ஜிம்மில் தீவிர பயிற்சி மேற்கொண்ட போது மாரடைப்பு ஏற்பட்டு சென்னையை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அன்விதா (24) எம்பிபிஎஸ் படித்து முடித்தார். பிரபல கண் மருத்துவரின் மகளான அன்விதா தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் எடையை குறைப்பதற்காக கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி மையத்திற்கு உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தார். வழக்கம் போல கடந்த புதன்கிழமை உடற்பயிற்சி மேற்கொண்ட சில நிமிடங்களிலேயே திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உடற்பயிற்சி மைய ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அன்விதாவை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அன்விதா மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 26 வயது பெண் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றுக்கு பிறகு இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இதற்குப் பலரும் கொரோனா தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்து வந்தனர். இதனையடுத்து ஐசிஆர்எம் இது குறித்து ஆய்வை மேற்கொண்டதில் இளைஞர்கள் திடீரென உயிரிழப்பிற்கும், மாரடைப்பிற்கும் கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.