திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே இருக்கிறது பூங்குளம்புதூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் உமாபதி. இவரது மகள் நந்தினி (வயது 22). இவரும் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் (வயது29) என்கிற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். ஓசூரில் இருக்கும் ஒரு வெல்டிங் பட்டறையில் ராமதாஸ் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர்களின் காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் மன உளைச்சல் அடைந்த இருவரும் நேற்று வீட்டை விட்டு வெளியேறினர். திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி நேற்று இரவு ஆம்பூர் பச்சகுப்பம் அருகே இருக்கும் தார்வழி ரெயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றனர். அங்கு தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த இருவரும் தங்கள் செல்போனில் செல்பி எடுத்துள்ளனர். பின் மனதை கல்லாக்கி கொண்டு தற்கொலை செய்ய முடிவெடுத்து தண்டவாளத்திலேயே படுத்திருந்த நிலையில் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் இருவர் மீதும் ஏறியதில் உடல் துண்டாகி ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.

இந்தியாவில் கோர முகத்தை காட்டும் கொரோனா..! பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடு உயர்வு..!

காலையில் தண்டவாளம் அருகே இருவர் பிணமாக கிடந்ததை கண்ட அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தண்டவாளம் அருகே கிடந்த செல்போனை மீட்டு காவலர்கள் சோதனை செய்த போது அதில் காதல்ஜோடி செல்பி எடுத்த படம் பதிவாகி இருந்தது. இதையடுத்து உயிரழந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்கொலை வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் உணவங்கள், கடைகள் மூடல்..! வணிகர் சங்கம் அறிவிப்பு..!