தமிழகத்தில் உணவங்கள், கடைகள் மூடல்..! வணிகர் சங்கம் அறிவிப்பு..!
பிரதமரின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் மார்ச் 22ம் தேதி அனைத்துக் கடைகளும் மூடப்படும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா அறிவித்துள்ளார். அன்றைய தினம் கடைகள் மட்டுமின்றி உணவகங்களும் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மொத்தமாக பலி எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்துள்ளது. இதனால் உலக நாடுகள் பீதியில் உறைந்துள்ளன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரையில் 206 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கின்றனர். அதிகபட்சமாக மகாராஸ்டிராவில் 52 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலையில் ஜெய்பூரில் கொரோனா பாதிப்பால் ஒருவர் மரணமடைந்ததை அடுத்து இந்தியாவில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் 22ம் தேதி ஊரடங்கு அமல்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அன்றைய தினம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் அன்று மாலை 5 மணி அளவில் மக்கள் வீட்டுக்குள் இருந்தபடியோ அல்லது பால்கனியில் நின்றபடியோ கைகளை தட்டியோ, மணி அடித்தோ கொரோனாவை ஒழிக்க பாடுபடும் ஊழியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தங்கள் ஆதரவை தெரிவிக்கவேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
தென்மாவட்ட முக்கிய ரயில்கள் அதிரடி ரத்து..!
தமிழகத்திலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே பிரதமரின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் மார்ச் 22ம் தேதி அனைத்துக் கடைகளும் மூடப்படும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா அறிவித்துள்ளார். அன்றைய தினம் கடைகள் மட்டுமின்றி உணவகங்களும் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தனியார் பால் நிறுவனங்கள் ஞாயிற்றுக் கிழமை பால் விநியோகம் செய்ய முடியாது என அறிவித்திருப்பது குறிப்பிடதக்கது.
10 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி..! உச்சகட்ட பதற்றத்தில் உலக நாடுகள்..!